Saturday, 27 June 2020

Dear David

அமானுஷ்ய அனுபவம்-15

Dear David :

ஆடம் எலைஸ் எனும் அமெரிக்கர் ஓர் இணைய விரும்பி, தனது அன்றாட நிகழ்வுகளை தினமும் சமூகவலைத்தளமான டிவிட்டரில் பதிவேற்றுவார். ஒருமுறை டிவிட்டரில் இன்று ஒரு அமானுஷ்யத்தை உணர்ந்தேன் என பதிவிட்டார், அவரது Followers என்னவென கமெண்ட் செய்ய, தொடர்ந்து மூன்று நாட்களாய் ஒரு சிறுவன் கனவில், தோன்றுகிறான் என பதிலுறைத்தார். பொதுவாக அனைவரின் கனவும் வெவ்வேறு இடங்களிலேயே பெரும்பாலும் தோன்றும், ஆனால் தனது கனவோ தனது படுக்கையறையிலேயே தோன்றுகிறது, அதுவும் எனது அறையிலுள்ள பச்சை நிற நாற்காலியில் அவன் அமர்ந்து எனை பார்க்கிறான் என ட்வீட் செய்தார். அவரது இந்த ட்வீட்டை பெரும்பாலானோர் கிண்டல் செய்து திட்டி பதிவிட்டனர். ஒருசிலர் ஆடமை மதித்து அந்த சிறுவனின் உருவம் எப்படி இருந்தது என கேட்டிருந்தனர். ஆடமும் யோசித்து தன் கனவில் வந்த தலைசிதைந்த அவ்வுருவத்தை வரைந்து ட்வீட் செய்தார். இக்கனவு தினமும் தொடர்ந்தது. தினமும் கனவில் அந்த சிறுவனும், ஆடமும் நேருக்குநேர் பார்த்தவாறு இருந்தனர். ஒருநாள் அச்சிறுவன் நாற்காலியை விட்டு எழுந்து ஆடம்மை நோக்கி அருகே கிட்டே வர, பதறியடித்து எழுந்தார் ஆடம். அதன்பின் மறுநாள் புதிதாக நூலகத்தில் இருக்குமாறு ஒரு கனவு வந்தது! அங்கே ஒரு பெண் ஆடம்மை நோக்கி வந்து, நீங்கள் தானே டேவிட்டை கண்டீர்கள்? என வினவ, தான் எந்த டேவிட்டையும் காணவில்லை என்றார். அதற்கு அப்பெண் அச்சிறுவன் பெயர்தான் டேவிட் என்றாள். மேலும் அவள் ஆடமிடம், முக்கியமாய் அந்த மூன்று கேள்விகளை மட்டும் டேவாட்டிடம் கேட்டு விடாதீர்கள், என கூறி மறைந்தாள்.

இப்போது அச்சிறுவனின் பெயர் டேவிட் என தெரிந்து. இதையும் ட்வீட் செய்து, மறுநாள் கனவுக்காக காத்திருந்தார். இரண்டு நாள் வேறு ஏதோ கனவு வர, மூன்றாம் நாள் அதே நாற்காலியில் அச்சிறுவன் அமர்ந்திருந்தான். அப்போது அச்சிறுவன் ஆடம்மை பார்க்க! ஆடம்,
 "டியர் டேவிட் உன் தலையில் ஏன் இந்த காயம்? என கேட்க, முகத்தை எங்கோ திருப்பி சூப்பர் மார்க்கெட்டில் விபத்து நடந்தாய் கூறினான் டேவிட்.
"சூப்பர் மார்க்கெட்டில் எங்கே விபத்து நடந்தது?" என கேட்க,
மீண்டும் முகத்தை எங்கோ திருப்பி, அங்கே ஒரு செல்ஃபில் விபத்து நடந்தது என கூறினான் டேவிட்.
அடுத்ததாய் எவரேனும் உன்னை தலையில் தள்ளி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது தற்செயலா என கேட்டார் ஆடம்.

முகத்தை ஆடம்க்கு நேராய் திருப்பி நாற்காலியை விட்டு இறங்கி கோபத்துடன் வந்தான் டேவிட். பதறியடித்து எழுந்தார் ஆடம், அப்போதுதான் முந்தைய கனவில் ஒரு பெண், டேவிட்டிடம் அந்த மூன்று கேள்வியை கேட்காதே என கூறியது நினைவில் வந்தது! அதன்பிறகு சிலநாள் டேவிட் வரவில்லை கனவில். ஆனால் அதன்பிறகு டேவிட்டை தேட ஆரம்பித்தார் ஆடம். செய்திதாள்களை சேகரித்து பார்த்தார், டேவிட் என்ற சிறுவன் சூப்பர்மார்க்கெட் விபத்தில் இறந்தானா! என தேடினார். ஆனால் அப்படியொன்றும் செய்தி கிட்டவில்லை. இது வெறும் கனவுதான் என நிம்மதியடைந்தார். அப்போதுதான் ஒன்றை கவனித்தார், அவரது வீட்டிலிருந்த இரு பூனைகள் தினமும் இரவு வீட்டின் கதவு அருகே மோப்பம் பிடித்தவாறு நின்று எதையோ பார்த்துகொண்டிருப்பதை கவனித்தார். தொடர்ந்து ஆறாவது நாளாய் நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது. அப்போது கேமராவிலும், மொபைலிலும் அக்காட்சியை பதிவு செய்தார். அப்போது கேமராவில் எடுத்த புகைப்படத்தில் அக்கதவுக்கு பின்னாளிருந்த இடம் கருப்பாகவும், மொபைலில் எடுத்தது சாதாரணமாகவும் இருந்தது. இதனையும் அவர் ட்வீட் செய்தார். அவருடைய Followers அந்த இருண்ட காட்சியை Bright செய்து பார்த்ததில் அதில் ஒரு உருவத்தின் பார்டர் தெரிவதாய் கமெண்ட் செய்தைதிருந்தனர். ஆடமும் அதனை பார்த்து அதிர்ந்தார். மறுநாள் அதை யோசித்துகொண்டே உறங்கிபோனார். அன்றைய கனவில் டேவிட் அவரை கையை பிடித்து இழுத்து எங்கோ சென்றான்.மறுநாள் குளிக்க செல்கையில் தன்கையை அப்போதுதான் கவனித்தார், கைமணிக்கட்டில் இரத்தம் உறைந்த சுவடு தெரிந்தது. அருகே பார்த்ததில் ஒருவன் கையை பிடித்தால் பதியும் அச்சு மாதிரி இருந்தது. அன்று இரவு டேவிட் வந்தான் அவனிடம் பேச முற்படுகையில் அவன் உடனே சேரைவிட்டு எகிறி ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே சென்றான். இது அவருக்கு கனவு போல் தோன்றாமல் உண்மையாய் நடப்பதாய் தோன்ற உடனே எழுந்தார் ஆடம். அங்கே கண்ணாடி உடைந்திருந்தது.அது பனிகாலமாததால் அச்சிறுவனின் பாத அச்சு தெளிவாக தெரிந்தது. அதனை தொடர்ந்து சென்று பார்த்தார். ஒருகட்டத்தில் அது நின்றது. அதன்பின் குழப்பம் கலந்த பயத்துடன் வீடு திரும்பினார்.
அன்று இரவு ஒரு வீடியோ கேமிரா தன் அறையில் செட் செய்து படுத்தார். அக்கேமரா நொடிக்குநொடி நிகழ்வினை காட்சிபடுத்தியது. காலையில் பார்த்த ஆடம் பயத்தில் உறைந்தார், காரணம் ஒரு சிறுவனின் உருவம் படுக்கையை சுற்றி சுற்றி வந்தது. ஆடமின் அருகே ஏதோ செய்கை செய்தவாறு விடியும் வரை இருந்ததை அக்கேமரா காட்சிபடுத்தியது. இதற்குமேல் அங்கு இருக்க தைரியமில்லாது அவ்வீட்டை காலிசெய்து கிளம்பினார்.

இதனையும் ட்வீட் செய்து பரபரப்பாக்கினார் ஆடம். இது ஒரு ஹாலிவுட் படமாக கூட வந்தது.



பங்கார்க்ட் கோட்டை

அமானுஷ்ய அனுபவம்: 14

பங்கார்க்ட் கோட்டை:

ராஜஸ்தான் மாநிலம் ஹல்வார் மாவட்டத்தில் உள்ளது இக்கோட்டை. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் இக்கோட்டை உள்ளதால் இயல்பாகவே இங்கு சூரிய ஒளி குறைவாகவே வருகிறது. ஆகவே பகலிலும் இங்கு இருள் சூழ்ந்துவிடுகிறது. அக்பரின் அமைச்சர் மன் சிங்கின் சகோதரர் மாதோசிங் என்பவரால் 17ம் நூற்றாண்டில் இக்கோட்டை கட்டப்பட்டது. 

சூரியன் மறைய ஆரம்பித்ததும், இக்கோட்டைக்கு எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சுற்றுலாப்பயணிகளை மாலை4 மணிக்குமேல் அரசாங்கமே அனுமதிப்பதில்லை, அதற்குமேல் எவரும் இங்கு தங்ககூடாதென அரசே அறிவுறுத்துகிறது! காரணம் அந்த கோட்டைக்குள் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பங்கார்த் கோட்டைக்குள் யாரோ நடனமாடுவது போன்றும் கத்துவது போன்றும் சத்தங்கள் வருவதாக அந்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் சென்ற பலர் இதுவரை வெளிவரவில்லை எனவேஅது குறித்த புகார்கள் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இப்படி பல புகார்கள் வந்ததை அடுத்து, பிரச்சனைகளை தவிர்க்கவே, இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் மக்கள் யாரும் செல்லக்கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எச்சரிக்கை பலகையும் கோட்டை முகப்பில் மாட்டியுள்ளனர்.

ஒரு சூனியக்காரனாலே இக்கோட்டை பேய்க்கோட்டையாய் மாறியதாய் கூறுகின்றனர். இக்கோட்டையின் இளவரசியின் அழகில் மயங்கி அவளை மணக்க விரும்பிய மந்திரவாதி, சதி செய்து, இளவரசியை அடைய எண்ணும் வேளையில் ஒருவிபத்தில் இறக்க, சபித்து விட்டு இறக்கிறான். ஆகவே அங்கு நடந்த போரில் கோட்டை நாசம் செய்யப்படுகிறது. இளவரசியும் கொல்லப்படுகிறாள். அதன்பின் அங்கு மக்கள் குடியேற்றம் இல்லாது, அன்று முதல் கவனிப்பாரின்றி அமானுஷ்ய சக்திகள் சூழ்வதாய் அருகேயுள்ள குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். வரலாறு ரீதியாய் ராஜபுத்திரரும், முஸ்லீம்களும் அடிக்கடி போரிட்டுள்ளனர். அதைபோல் அக்பர் காலத்திற்கு பின் நடைபெற்ற போரில் நிறைய ராஜபுத்திரர் இக்கோட்டையில் வெட்டி வீழ்த்தப்பட்டு சடலங்களை கூட அப்புறப்படுத்த இயலாது அவசரகதியில் இக்கோட்டையை காலிசெய்து கிளம்பியிருக்க வேண்டும். அதைபோல் புறக்கணிக்கப்பட்ட இந்நகரில் கிடந்த பிணங்களின் கணக்கற்ற எழும்புக்கூடுகளை கண்டு பின்னால் வந்த மக்களும் இக்கோட்டையை புறக்கணித்துவிட்டனர். 

மாலை நான்கு மணிக்குள் இவ்வூர் அடங்கி விடுகிறது. அதனால் சுற்றுலாப்பயணிகளும் வருவதில்லை. அதையும் மீறி இங்கேவரும் பயணிகளை உள்ளூர் வாசிகள் கண்டுகொள்ளாது விட்டுவிடுகின்றனர். நிறைய சுற்றுலாவாசிகள் வீம்பிற்கு பாதிதூரம் சென்று பயம் காரணமாய் தெறித்து ஓடிய சம்பவங்களும் உண்டு. இக்கோட்டையின் பல வாயிற்களை இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. கண்டுபிடிக்கப்படாத விஷயங்கள் பல இக்கோட்டைகள் உள்ளன. பல பாதாள அறைகள் தூர்ந்துபோய் அடைபட்டு கிடக்கிறது. இயல்பாகவே இருண்ட இவ்வறைகளை மேற்கொண்டுபோய் பார்க்க தைரியம் இல்லாததால் பல அமானுஷ்யங்கள் இக்கோட்டைக்குள் மறைந்து கிடக்கிறது.






அமானுஷ்ய அனுபவம் 13

அமானுஷ்ய அனுபவம்: 13

புதுக்கோட்டையிலுள்ள நல்ல அழகிய கிராமம் அது. அங்கே ஓர் நல்ல வசதியான குடும்பம் வசித்தது. அழகிய இரு பெண்கள், செல்வங்கள் என சந்தோஷத்துடன் கழிந்தது அக்குடும்பத்திற்கு. அக்குடும்பத்தின் மூத்தமகளுக்கு வரண்பார்த்து திருமணம் முடிக்கும் நிலையில் திடீரென தூக்கு மாட்டி அப்பெண் இறக்க வீடே சோகத்தில் மூழ்கியது. எதனால் அவள் இறந்தால் என குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. செல்வமகள் இறந்ததால் தங்கள் சொந்த வீட்டை காலி செய்து வேறு நகரில் குடியேறினர்.

பூட்டியிருந்த அவ்வீட்டிற்கு மூன்றுமாதம் கழித்து ஒரு இளம் தம்பதியினர், இவ்விஷயத்தை கேள்விப்படாமல் குடியேறினர். ஒருவாரம் நன்றாக போனது, மறுவாரத்தில் கணவர் இரவுப்பணி செல்ல தனியாக இருந்த மனைவிக்கு இரவில் அழுகுரல் கேட்டது. அதுவும் வியாழன் அன்று மட்டுமே. நேரம் செல்ல செல்ல அக்குரல் இம்சித்தது. அன்று இரவு முழுவதும் அக்குரல் அமானுஷ்யத்துடனே நடுங்கிய மனதுடன் முழித்திருந்தாள் அவள். பின் கணவர் வந்தவுடன் கதறியபடி நடந்ததை கூறினாள். பூனையின் சத்தம் சிலசமயம் அழுகைக்குரலாய் கேட்கும் பயப்பட வேண்டாம் என கூறி, இருநாள் விடுப்பு எடுத்து தங்கினார். சத்தம் ஏதும் கேட்காததால், இது மனப்பிரம்மையே என கணவன் கருதினான். மறுவாரம் காலைப்பணி ஆதலால் இரவு மனைவியுடன் தங்கினார். புதன்கிழமை வரை தொல்லையில்லாத இரவு, வியாழக்கிழமை தூங்காஇரவு ஆனது. மீண்டும் அக்குரல் மெல்ல விசும்ப ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக அக்குரல் இருவரையும் இம்சிக்க ஆரம்பித்தது. இருவரும் நடுங்கியபடி வீடு முழுக்க அலசினர். அக்குரல் ஓயவேயில்லை. முதல்வேலையாக மறுநாளே வீட்டை காலி செய்தனர்.

அவ்வீட்டிற்கு அருகே ஒரு தம்பதியினர் வசித்தனர். நன்றாக போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை, ஒருநாள் திடீரென தன் அருகே படுத்திருந்த மனைவியை காணாது, கணவன் தேடினான், வீடு முழுக்க காணவில்லை. அவரது குடும்பமே ஊர்முழுக்க தேடியது அவள் சிக்கவேயில்லை. தன் வீட்டின் எதிரே சாத்தியிருந்த வீடுமட்டுமே பாக்கி! அதன் காம்பவுன்டு சுவர் மட்டும் திறந்திருக்க, மெலிதான சந்தேகத்தில் பயத்துடன் உள்ளே போக, அங்கே வீட்டின் வாசலில், முடியில் முகத்தைபுதைத்து அழுதுகொண்டிருந்தாள் அவள் மனைவி. அதன்பின் புதுக்கோட்டையில் பேய் ஓட்டுவதில் பிரசித்தமான கீழப்பழுவாஞ்சி போய், அவளுக்கு பிடித்தது பேய்தான் என கண்டறிந்து, சில சடங்குகள் செய்து அவ்வீட்டை உடனடியாய் காலிசெய்து கிளம்பினர்.

இழுப்பூரிலிருந்து அவ்வூரில் டீகடை புதிதாக ஆரம்பித்தார் ஒருடீக்கடைகாரர். பூட்டியிருந்த வீட்டின் கதையை கேள்விப்படாமல், வீடு பெரிதாக வாடகை குறைவாக உள்ளதே என குடும்பத்துடன் குடியேறினார். தொடர்ச்சியாக மூன்று வியாழக்கிழமைகளில் அவரின் மனைவி கனவில் ஒரு பெண்தோன்றி 'நான் ஒன்றும் செய்யமாட்டேன்' என ஓரிரு வார்த்தை மட்டும் கூறிச்சென்றாள். கனவரிடம் இதைகூற இதை அவரும் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் கடைப்பணி முடித்து கொஞ்சம்தாமதாய் வீட்டிற்கு செல்ல மாடிப்படியில் ஓர் பெண் அமர்ந்துள்ளதை கண்டு அது மனைவியின் உறவினர் போலும் என சிரித்துக்கொண்டே படிகளில் ஏறிக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருக்க, மேலிருந்த மனைவி கனவரின் குரல் கேட்டு எட்டிபார்க்க! 'யார்ட்ட பேசுறீங்க இந்நேரத்துல' என வினவ, மேலே மனைவியை பார்த்துவிட்டு படிக்கட்டில் பார்த்தால் அப்பெண்ணை காணவில்லை. மறுநாள் அவரது மகனுக்கு இவ்வீட்டின் வரலாறு தெரிய ஆரம்பிக்க. உரிமையாளருடன் சண்டையிட்டு அவரும் வீட்டை காலிசெய்தார்.

இன்றுவரை அவ்வீடு பூட்டியே கிடைக்கிறது. இன்னும் இவ்வீடு தொடர்பாய் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ளது.

தகவலாளி: Francis Edison X

ஐகோர்ட் மகாராஜா

அமானுஷ்ய அனுபவங்கள்-12

ஐகோர்ட் மகாராஜா:

"எளிய எளிய உயிரை
ஒரு வலிய ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
நேற்று செய்த தவறை
நீ மேலும் மேலும் செய்தால்
மேலே உள்ள அவனோ
உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான்.."

தூத்துக்குடி, திருநெல்வேலி பக்கத்தில் சாதி வேறுபாடின்றி பலருக்கும் குலதெய்வமாய் உள்ளவர் இவர். நிறைய டீ கடைகள், வாகனங்களில் "ஐ கோர்ட் மகாராஜா துணை" என்ற வாசகத்தை காணலாம். அவ்வளவு பிரபலம் இவர். சுடலைமாடன் எவ்வாறு ஐகோர்ட் மகாராஜா ஆனார் என்பதை காண்போம்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது ஆறுமுகமங்கலம் எனும் ஊர். இங்குள்ள சுடலைமாடனே ஐகோர்ட் மகாராஜா என்று வணங்கப்படுகிறார்.
ஆறுமுகமங்கல பகுதியில் சின்னான் என்கிற ஒரு நபர் வாழ்ந்துவந்தார். இவருக்கு பெற்றோர்கள் யாரும் கிடையாது. தனிமரமாய் அநாதையான இவர் அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். அவர் ஒரு நாள் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது. ஒரு அப்பாவியை இரண்டு நபர்கள் அரிவாளால் துரத்திக்கொண்டு வந்தனர். அப்போது ஒரு சுடலைமாடசுவாமி கோவில் அருகே அந்த இரு நபர்கள் அந்த அப்பாவியை வெட்ட முயன்றனர். அதற்கு அந்த அப்பாவி மனிதர் தன்னை வெட்ட வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சி பார்த்தார். சுடலை மாடன் பொல்லாத சாமி, அவர் முன்னே கொல்லாதீங்க, அது உங்களை சும்மா விடாது என கூறியும் பார்த்தார் ஆனால், அவர்கள் கேட்கவில்லை, இதை மறைவிலிருந்து பார்த்தான் சின்னான், பதைபதைத்து போனான், ஆனால் அவனால் அவர்களை தட்டி கேட்கும் தைரியமில்லை. தடுக்கவும் முடியவில்லை அவன் கண்முன்னே அந்த அப்பாவியை கொடூரமாய் சம்பவம் செய்தனர், அந்த இரு கொலைகாரர்கள். தலைவேறு கால்வேறு பிய்த்து எறிந்து சென்றனர். குற்றஉணர்வில் தவித்தான் சின்னான், உடனே ஓடிசென்று ஊராரிடமும், இறந்தவன் மனைவியிடமும் அழுதவாறு தெரிவித்தான். கதறி அழுதாள் இறந்தவனின் மனைவி, இவ்வழக்கை புகாரளியுங்கள் நான் வந்து கண்டிப்பாய் சாட்சி சொல்கிறேன் என சின்னான் கூறி சென்றான். வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றது. சாட்சி சொல்ல தயாரானான் சின்னான், ஆனால் கொலையாளிகள் ஆள் வைத்து சின்னானை தூக்கி வந்து அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் கட்டிவைத்து சென்றனர். 

நீதிபதி வழக்கை விசாரித்தார். முக்கிய சாட்சியான சின்னானை அழைத்தார். ஆச்சர்யமாய் அங்கு சின்னான் வந்தான். கொலையாளிகளுக்கு எதிராக ஆணித்தரமாய் சாட்சி சொல்லினார். கொலையாளிகள் திகைத்தனர். அடித்து துன்புறுத்தின காயமும் இல்லை. மயங்கி அவன் இந்நேரம் எழுந்திருக்க வாய்ப்பில்லை. உடனே தன்னுடன் வந்த ஆட்களை அனுப்பி சோதனை செய்ய சொல்லியனுப்பினர். அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்கிய நிலையில் அவர்கள் கட்டிவைத்தவாறே சின்னான் கிடந்தான். பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது அன்று அந்த அப்பாவி சொன்னதுபோல் சுடலைமாடன் நேரில் வந்து சாட்சி சொல்லி கொலையாளிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டான் என அவர்களுக்கு புரிந்தது. அதன்பின்னர்தான் அப்பகுதியிலுள்ள சுடலைமாடன் கோவில் சுவாமி ஐகோர்ட் மகாராஜா எனும் பெயரால் அழைக்கப்பட தொடங்கினார். 
தவறு செய்தால் எவ்வளவு பெரிய ஆளாயினும் அவனை தண்டிப்பான் சுடலைமாடன் எனும் நம்பிக்கை இன்றும் இப்பகுதியில் நிலவி வருகிறது! 

இக்கதை பிரிட்டிஷார் காலத்தில் நடந்ததாய் கூறப்படுகிறது.



பாத்திமாவின் ஆவி

அமானுஷ்ய அனுவங்கள்-11

தகவலாளி Francis Edison X

புதுக்கோட்டையில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் இது.ஒரு ரம்ஜான் நாளில் இஸ்லாமிய குடும்பங்கள் சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கையில் ஒரு நாய் மூலமாய் அந்த விபரீதம் நடந்தது.
வெறிமுத்திபோன அந்த நாய் 11 பேரை கடித்து வைத்தது. அதில் முக்கியமாய் பாத்திமா எனும் நடுத்தர வயது பெண்ணை கொஞ்சம் அதிகமாய் கன்னத்திலும் கடித்து வைத்தது. நாய்க்கடிக்கு பத்தியம் இருந்து வைத்தியம் பார்ப்பார்கள், அப்பெண்ணுக்கு இந்த வைத்தியம் ஏதும் பலிக்கவில்லை. நாளாக நாளாக அப்பெண்ணிற்கு நோய் முற்றியது. நாயினை போல வாயில் உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தது. சில நாளில் நோய் இன்னும் முற்றியது! இரவில் நாயைபோல கத்த ஆரம்பித்தார். அவரது பழக்கமும் மாறியது. உடலில் முரட்டுத்தனம் ஏறியது. தலைமுடியை பிய்த்து எறிய ஆரம்பித்தார். அந்த தெருவிற்கு வரவே அனைவரும் பயந்தனர். அந்த வீட்டைச்சுற்றி நாய்கள் கூட்டமாய் கூடி கத்த ஆரம்பித்தது. வீட்டில் ஆள்வைத்து வைத்தியரை கூட்டி வந்தனர். வைத்தியம் பார்க்க அவரை விடவில்லை. வைத்தியர் ஊசிபோட முயல்கையில் அவரை அனுமதிக்காமல் அவ்வளவு முரட்டுத்தனம் பண்ணினாள் பாத்திமா. ஒருவாறு கடும்முயற்சி செய்து ஊசிபோட்டு விட்டார் வைத்தியர். ஆனால் அன்றிரவே இறந்துபோனாள் பாத்திமா. அடக்கம் செய்து முடித்து வந்தனர், ஊராரும் நிம்மதியாய் தூங்கினர்.

மறுநாள் அந்த தெருவில் மதினா எனும் பெண்மணியின் வீட்டுகதவை மூனு மணிக்கு யாரோ தட்டும் சப்தம் கேட்டது, கதவை திறந்தாள் மதினா. பர்தா அணிந்து அங்கு நின்றாள் பாத்திமா. என்னை ஊசிபோட்டு கொன்னுட்டாங்க மதீனாக்கா நீ அத கேட்கமாட்டியானு கேட்க, பதறியடித்து கதவையடைத்து கத்த தெருவே பரபரப்பானது. அதற்கு அடுத்து மூன்றுநாள் கழித்து அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பினார் அக்பர். ஏர்போர்ட் ஃபார்மாலிட்டி முடித்து வீட்டுக்கு வருகையில் நள்ளிரவு மணி 2 ஆனது. வீட்டுக்கதவை தட்டினார். அனைவரும் அசந்து தூங்கினர். சரி வெளியே படுக்கலாம் என திண்ணையில் போர்வையை விரித்து படுத்தார். பர்தா அணிந்து பாத்திமா வந்து, இவரிடம் நலம் விசாரித்து சென்றிருக்கிறார். இந்த சாமத்துல இங்க என்னக்கா பண்றீங்க? னு கேட்டிருக்கார். அது உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லைனு கோவத்தோடு பாத்திமா கிளம்பினார். அதன்பின் அசந்து தூங்கினார். காலை விடிந்ததும் அக்பரை வீட்டினர் வரவேற்றனர். குளித்துமுடித்து இரவு நடந்ததை சொல்லி, பாத்திமாக்கா ஏன் நைட்ல தனியா நடந்து அந்நேரம் போறாங்கனு இவர் சொல்ல வீடே அதிர்ந்து போனது. இவ்வாறு கிட்டத்தட்ட 10 சம்பவங்கள் மேல் நடந்தது. 

அதன்பின் இறுதியாக வெளியூரிலிருந்து ஊருக்கு வந்த இளம்பெண்ணின் மேல் பாத்திமா இறங்க! அப்பெண் வீட்டையே களேபரபடுத்தினாள். இரவில் வாயிலிருந்து நாய்போல நீர் சுரந்தது. கண்கள் மேலே சொருகி, மிருகத்தனமானாள் அவள். அவர் கிறிஸ்தவ மதம் சார்ந்தவரார் ஆதலால் மணப்பாறை அருகே ஓர் அந்தோணியார் கோவில் அழைத்து சென்று பிரசன்னம் பார்த்தனர். அந்த பாதிரியார் சில விஷயங்களை கண்டறிந்தார். இறந்துபோன பாத்திமாவின் உடலை சரியாக குழியில் புதைக்கவில்லை. மறுநாள் பெய்த மழையில் பிரேதம் வெளியே வர, பாத்திமாவின் ஆவி அவளது வீடுநோக்கி சென்றது தெரிய வந்தது.ஆனால் அங்கே அவளது வீட்டில் வெள்ளெருக்கு வேரினால் வீட்டைச்சுற்றி குரான் ஓதி மந்திரித்து ஒரு கட்டு கட்டியுள்ளனர்.ஆகவே அவளால் உள்ளே நுழைய முடியாமல் தெருவில் அலைகிறாள், அவளது ஆவியே இந்த பெண்ணின் உடலில் உள்ளது என கண்டறிந்தார். அதன்பின் மந்திரித்து அனுப்பி வைத்தார். அப்போதும் அப்பெண்ணின் அட்டகாசம் தொடர்ந்தது. வீட்டினர் செய்வதறியாது திகைத்தனர். மறுநாள் அவ்வூரின் புகழ்பெற்ற தீமிதி திருவிழா நடந்தது ஊரே திரண்டது. அப்போது அவ்வூரின் பூசாரி பட்டையார் என்பவரிடம் அப்பெண்ணின் தாயார் காலில் விழுந்து தன்பெண்ணை காப்பாற்றுமாறு கதறினார். உடனே அப்பெண்ணை அழைத்து வரச்சொன்னார். அம்மனின் குங்குமத்தை அப்பெண்ணின்மேல் வீசி இப்பெண்ணைவிட்டு நீங்கிசெல் அம்மா என வணங்கினார். உடனே அப்பெண் பால்கொண்டு வரச்சொன்னார். பின் அதன்மேல் இனிநான் இவ்வூரில் வரமாட்டேன் என சத்தியம் செய்து. ஊரார் முன்னிலையில் தொழுது உருதுமொழியில் குரான் மந்திரத்தை ஜெபித்தார். கிறிஸ்தவ பெண் எவ்வாறு சரளமாய் அரபி பேசுகிறாள் என ஊரே அதிர்ச்சியில் உறைந்தது! சிறிதுநேரத்தில் அந்த இளம்பெண் மயங்கி சரிந்தாள். அதன்பின் அவளது சமாதியை நன்றாக மூடி அடக்கம் செய்தனர் அக்குடும்பத்தினர்.
அன்றிலிருந்து இன்றுவரை பாத்திமாவின் ஆவி இதுவரை ஊரில் தென்படவில்லை.

கரும்புலியின் ஆவி

தினம் ஒரு அமானுஷ்யம்-10

கரும்புலியின் ஆவி:

மே 21 1991 அன்று சரியாக 22:21 மணிக்கு தானு, ராஜீவ்காந்தியை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த  வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ்காந்தி மற்றும் 14 பேரும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் நேரடியாக சம்பந்தபட்ட தணு ராஜீவ்காந்தியுடன் உடல் சிதறிப் பலியாகினார். இந்த கொலை தொடர்பாக சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் , முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகின்றனர்.
அதன்பிறகு ஒருமுறை பிரியங்காந்தி-நளினி சந்திப்பு நடந்தது. அப்போது நளினி கூறிய தகவலை வழக்கறிஞர் ஏகலைவன் குறிப்பெடுத்துக்கொண்டார். அதை நளியின் குரலாய் தற்போது பார்ப்போம்.

மே21 சுபா,தனுவுடன் பாரீஸ் கார்னர் பேருந்துநிலையம் போய் ஏறினோம். 7 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் சென்றடைந்தோம். சிவராசனுக்கு அங்கிருந்த நிறைய விஐபிகள் பரிட்சயமாய் இருந்தனர். விஐபி வரிசையில் தனுவை அமர வைத்தார். அதன்பின் தொலைவில் சென்று அங்கிருந்த விஐபிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின் சுபா என் கையைபிடித்து தொலைவாக அழைத்துச் சென்றார். ஏன்?என நான் கேட்க,பதிலளிக்காமல் என்னை வெளியே இழுத்துச் சென்றார். சாலையை நோக்கி நாங்கள் நகருகையில், இதுவரை நான் கேட்டிராத மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது.  அந்த இடமே புகையாய் காட்சியளித்தது.

அதன் பின் விறுவிறுவென சிவராசன் எங்களை ஒரு புதுவீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் ஆட்டோவில் அழைத்துச் சென்றார். நாங்கள் மூவரும் ஆட்டோவில் இறங்கி நிற்கையில் எங்கள் எதிரே "தணு" நடந்து சென்றார். இது கற்பனையல்ல நாங்கள் அனைவரும் அதை பார்த்தோம். இது எப்படி சாத்தியம் என சுபாவை நான் பார்க்க! அவர் வாய்மேல் கைவைத்து அமைதியாய் தனுவை கவனிக்க சொன்னார். வீட்டிலிருந்து எவ்வாறு தணு கிளம்பினாரோ! அதே உடையில் கையில் சந்தனமாலையுடன் நடந்து சென்றார். பிறகு சிபிஐ எங்களை கைதுசெய்து தனித்தனியே எங்களை கைதுசெய்து உண்மையறியும் சோதனை செய்தும் மூவரும் அதையே கூறினோம் என பின்னாளில் எங்களுக்கு தெரிந்தது! 
இன்றுவரை இது கற்பனையா! பிரம்மையா அல்லது ஆவியா!  என தெரியவில்லை.

வழிவிடு கருப்பா

அமானுஷ்ய அனுபவம்-09

வழிவிடு கருப்பா:

அந்திசந்தி நேரத்திலும்
ஆபத்து நேரத்திலும்
வந்திங்கே காத்திடவே
மஞ்சனத்தி அழகன் வாரார் - நம்ம
மருதங்குடிக் கருப்பன் வாரார்
நோய்விரட்டி பேய்விரட்டி
தாய்போலச் சேய்காக்க
மாயவனின் தூயவனும்
வாழ்வளிக்க இங்கே வாரார் - நம்ம
நெய்வாச கருப்பன் வாரார்.

தென்மாவட்ட மக்களின் பிரதான தெய்வம், பொதுவாக இவரை மலையாளதேசத்திலிருந்து வந்ததாக கூறுவர். பதிணெட்டாம்படி கருப்பருக்கு மட்டுமே இக்கதை பொருந்திவரும் என்பது என் கருத்து, பிற ஊர்களில் வணங்கும் கருப்புகளெல்லாம் அவரவர் முன்னோர்களே, நமது பாட்டன் பெயரே நினைவில் இருப்பதில்லை நமக்கு. அப்படியிருக்க எத்தனையோ நூற்றாண்டு கடந்து வணங்கப்படும் முன்னோரின் பெயர் நினைவுபடுத்தல் சாத்தியமன்று, ஆகவே அவர்களுக்கு பொதுவான பெயர் "கருப்பு".
 நிறைய நடுகற்களை வழிவழியாய் வணங்கும் மக்கள் அவர்களை "சாவாங்கருப்பு" என்றே குறிப்பிடுவதை நினைவிற் இங்கே கூறலாம். கருப்பு என்பவரை பொதுவாக காக்கும் கடவுள் என்றே பலரும் கூறுகின்றனர். 
மூவேந்தர் போன்று நிலையாக ஒரு கட்டமைப்பு அரசாங்கம் தோன்றும் முன்பு சின்ன சின்ன குழுக்களின் தலைவன் அல்லது வீரன் வனவிலங்கிடமிருந்தோ, ஆநிரை மீட்டலோ, அல்லது இருப்பை தக்கவைக்க என எதோ ஒரு பெருஞ்செயலுக்காய் தன் உயிரை குடுத்தவன் நினைவாய் கோவிலெழுப்பி வணங்குவது நம் பழம்மரபு. அவருக்கு கருங்கல் கோவில் இல்லை, வருடந்தோறும் புதிதாக மாடம் எழுப்பி அவர் மனம் குளிர பலியினங்களை வெட்டி உறவினர் ஒன்றுகூடி என்றோ இறந்தவனை காலகாலமாய் போற்றி வந்தனர். அவனே கருப்பு!  
கருப்பரை பலரும் ஆங்காங்கே கண்டதாய் பல கதைகள் உண்டு. அப்டி ஒரு கதை இது,  

சரியாய் 11 வருடம் முன்பு,
மூனுநாளா வேலைக்கு வரலையேனு, நண்பர்கள் சூப்பர்வைசருக்கு போன்போட்டோம். அவங்க அம்மாச்சிக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரில சீரியஸ்னு சொன்னார். இது வழக்கமானதுதான். ஆனா அடுத்து சொன்னதுதான் புதுசு. 
அவன் பாட்டி அதிகாலை 4.30-5 க்கு எந்திருச்சிடுவாங்க, தினமும் மாட்டுக்கு கூளம் போட்டு தன்னிக்காட்டி, கிணற்றடில தண்ணீர் இறைச்சி பாத்திரம் விளக்கிடுவாங்க. அப்படிதான் மூனுநாள் முன்னாடி மாட்டுக்கு தண்ணிகாட்டிட்டு கிணற்றடிக்கு வரப்ப கிணத்து திண்டுல கால்மேல கால்போட்டு தலைல உருமா கட்டி, தோள்ல ஒரு அங்கி மாட்டி சாட்டைய தொங்கவிட்டு வெற்றுமார்போட திரும்பி உட்கார்ந்து ஒரு ஆள் சுருட்டு குடிச்சிட்டு இருந்திருக்காரு! அம்மாச்சி யார்ரா!!!!! அதுனு சத்தம் போட்ருக்கு, அந்த ஆள் மசியவேயில்லை. கடுப்பான ஆச்சி கைல பாத்திரம்ல இருந்த பழைய கழனி தண்ணிய வேகமா கிணத்துல உட்கார்ந்திருந்த ஆள்மேல ஊத்திருக்கு!

அவ்வளவுதான் அந்த உருவம் கடுப்பாகி திரும்பியது! ஆச்சி இப்போ அந்த உருவத்த நல்லா பாக்குது சிவந்துபோன கண்ணு முருக்குமீசையோட கைல அருவாள எடுத்துட்டு வேகமா ஓங்கியது!  அப்புறம் விழியை மிரட்டி, இடதுகைல அருவாள பிடிச்சி வலதுகைக்கால கண்ணத்துல ஓங்கி இரண்டு அறை!  அவ்வுளவுதான் கிளவி மயங்கிருச்சி! 

இதுதான் அந்த அண்ணன் சொன்னது நாங்க போய் ஆஸ்பத்திரில பாத்தோம்!  அந்த ஆச்சி ஆஸ்த்திரில மயங்கிய நிலையில் கிடந்தது. கண்ணம் நல்லா கண்ணு வரை வீங்கியிருந்தது.  இடது கண்ணம் அறைவாங்கி இரத்தம் வழிந்த சுவடு தெரிந்தது. இவ்வளவு விவரமும் சொன்ன ஆச்சி அதன்பிறகு இரண்டு நாளில் இறந்தும் போனார். அதன்பின் அவர்கள் வீட்டில் கிடா பலிகொடுத்து கருப்பை சமாதானப்படுத்தி வைத்தனர்.

அமானுஷ்ய அனுபவம்: 08

அமானுஷ்ய அனுபவம்: 08

ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
நரகம் நீக்குபவனே போற்றி
நாய் வாகனனே போற்றி நாடியருள்வோனே போற்றி
நிமலனே போற்றி
நிர்வாணனே போற்றி

இதுவரை உலக அளவில் பிரபலமான சில மர்மங்களை கண்டோம். இப்ப லோக்கல் அனுபவம் ஒன்றை காண்போம், தகவலாளி எனது நண்பன்தான் பொய் சொல்லும் அவசியம் அவனுக்கு இல்லை. அவன் கண்களின் உண்மை பேசும்போது ஏற்படும் ஒரு பரவசம் தெரிந்தது.
ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான் ஜீவா. இனி நடந்ததை அவன் கூறிய நடையிலே காண்போம்.

 ஒரு நேர்த்திக்கடனுக்காக விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை நோக்கி குடும்பத்துடன் சென்றிருந்தோம்.அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள்  மாரியம்மன்.பத்து வருடம் முன்பு அப்போது பெய்த மலையில் அர்ச்சுனா நதியில் முழங்கால் மூழ்கும் வரை வெள்ளம். தற்காலிக தெப்பம் ஏற்படுத்தி குடும்பத்தினர் அதில் சென்றோம். இரவு கோவிலில் தங்கி காலையில் கிடாவெட்டி செல்வோம், இதுவே அங்கு பிராதான நேர்த்திக்கடன்.  அதேபோல் அனைவரும் அங்கு சென்று தங்கி உணவருந்தி படுத்தோம். நள்ளிரவு இரண்டு மணி இருக்கும், இயற்கை உந்துதல் காரணமாய் கொஞ்சம் தள்ளி உள்ள காட்டில்  நடந்து சென்றேன். அருகே பெண்கள் இயற்கை உபாதை கழிக்க வந்து சென்று கொண்டிருந்ததால், கொஞ்சம் போகலாமென உள்ளே போக, வழிமாறி நடுக்காட்டுக்குள்ளேயே போய்விட்டேன். தூரத்தில் தெரிந்த மாரியம்மன்கோவில் விமான விளக்கும் கண்ணிலிருந்து மறைந்தே விட்டது. சுற்றிலும் மையிருட்டு, ஆந்தைகளும், இரவு நேர கீச்சானும் கத்தி பீதியை கிளப்பிக் கொண்டிருந்தது. பயத்தில் வேர்த்துக் கொட்டியது. கையில் 1110 போன் தான் இருந்தது. அந்த வெளிச்சத்தை வைத்து தான் சுற்றி பார்த்தேன். முழுக்க கருவேலங்காடு, 

திடீரென நாயின் குலைப்பு சத்தம் கேட்டது. தொலைவில் கேட்ட சத்தம், மெல்ல மெல்ல அருகே கேட்க ஆரம்பித்தது. பயத்தில் கால்கள் நடுங்க ஆரம்பித்தது, மெல்ல நடையை வேகமாக்கினேன், நடக்க நடக்க பின்னாலிருந்த நாயின் சப்தமும் அருகே கேட்க ஆரம்பித்ததது. பயத்தில் கொஞ்சம் மெதுவாக ஓட ஆரம்பித்தேன், என்னைத்தாண்டி நாய் முன்னே வந்தது. அப்போதுதான் நாயை கவனித்தேன். நாயா அது கன்றுக்குட்டி மாதிரி நல்ல உயரம் கொழுத்த உடல் கழுத்தில் மணி,  நெற்றியில் குங்குமம். என்னை பார்த்ததும் நடையை மெதுவாக்கியது! பின் நான் முன்னே சென்றேன் பின்னால் நாயின் குலைப்பு கேட்காது, நாயின் இளைப்பு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே வந்தது. நான் மொபைல் டார்ச் வைத்து, அதன் வெளிச்சத்தில் நடந்து சென்றேன்.பின் சிறிது நேரத்தில் இருவழி மண்பாதை கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. வலது புரத்தில் பாதை கொஞ்சம் பெரிதாக இருந்தது, அதை நோக்கி கால் நடக்கையில் பின்னாளிலிருந்த நாய் விரட்டும் தோரணையில் வேகமாய் குரைத்தது. அதன்பிறகு நான் பின்வாங்க, நாயின் குரைப்பு குறைய,  பின் இடதுபுறம் நோக்கி நடந்தேன். சிறிது நேரத்தில் நாயின் இளைப்புசத்தமும் குரைப்பும் முற்றிலும் நின்றுபோனதை உணர்ந்தேன். பின்னாடி திரும்பினால் நாய் காணவில்லை. ஆனால் கண்முன்னே கோவிலின் விமான ஒளி தெரிந்தது. பின் விருவிருவென நாய்க்கு நன்றி சொல்லி கோவிலுக்கு வந்தேன். அதற்குள் எனை காணாமல் அனைவரும் கோவிலையே அலசி வைத்தனர். இரண்டு மணிக்கு  சென்ற நான், திரும்பிவருகையில் நாலறை  மணி ஆயிருந்தது. கோவிலுக்கு வந்ததும் மாமாதான் முதலில் என்னை பார்த்தார். அதன்பின் கன்னத்தில் பளாரென ஒரு அறையை வாங்கி, நடந்ததை கூறினேன். அருகேயிருந்த பூசாரி ஒருவர், காலையில் அர்ச்சுனா நதியில் குளித்துவிட்டு கோவில் வாசலில் தலையை சுத்தி தேங்காய் உடையுங்கள் என தாயிடம் கூறினார். சரியென கூறிவிட்டு 7 மணியளவில் ஆற்றில் குடும்பத்துடன் நீராடிவிட்டு, கடையில் தேங்காய் வாங்கி, கோவில் வாசலில் என்னை நிற்க தேங்காயில் குங்குமம் தடவி@, குடுமியில் கற்பூரம் வைத்து எனை சுற்றினர், பின் கற்பூரம் அணைந்தபின் என் கையாலேயே சூரைத்தேங்காய் உடைக்க சொல்லினர், நானும் வாசலில் தேங்காய் உடைக்க ஒரு பெரிய பாதி அருகேயிருந்த சிறிய ஆலயத்தின் வாசலில் விழுந்தது, சரி அதைபார்ப்போமே என போனேன். அங்கே பைரவர் சிலை இருந்தது. அவர் பின்னால் இரவில் பார்த்த அதே தோற்றத்தில் நாய் இருந்தது!

எனக்கோ பேரதிர்ச்சி பின் கோவில் பூசாரியிடம் குடும்பத்துடன் இரவு நடந்ததை கூறினோம். பைரவனை பார்த்தியாப்பா! ரொம்ப வருஷம் முன்னாடி இதேமாதிரி என் உறவுக்கார பையன் பார்த்திருக்கான் நிறைய பேர் பார்த்திருப்பாங்க வெளிய சொல்றதில்லை. இதே மாதிரி வழிதெரியாதவங்க, யாரும் வைப்பாறு எல்லைவர வழிமாறிபோனா பைரவரு உதவிக்கு வருவாறு, அதுவரைக்கும் அவரோட எல்லைதான், இனிமே உனக்கு நல்லது நடக்கும் என விபூதி பூசிவிட்டார்.



மோய் _ஈஸ்டர் தீ

அமானுஷ்ய அனுபவம்-07

ஈஸ்டர்தீவு மர்மங்கள்:

முன்னொரு காலத்தில் இந்த தீவு முழுவதும் எரிமலையாக இருந்தது. 
பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்த தீவினுள் பல மர்மங்கள் புதைந்துள்ளது. ஐரோப்பியர்கள் ஒரு ஈஸ்டர் திருநாளன்று கண்டறிந்ததால் அதுவரை பெயரிடப்படாத அந்த தீவிற்கு "ஈஸ்டர் தீவு" என பெயரிட்டனர்.இந்த தீவின் கடற்கரையில் சுமார் ஆயிரக்கணக்கில் ராட்சத மனிதமுகஉருவங்கள் ஆங்காங்கேநடப்பட்டுள்ளது. அவைகளின் முகங்கள் சாதாரண மனித முகத்தின் வழக்கத்திற்கு மாறாக  நன்கு நீண்டதாக செதுக்க பட்டு உறுதியான கூர்மையான மூக்கு தடித்த உதடுகள் மற்றும் அடர்த்தியான புருவங்கள் கொண்டிருந்தனஒவ்வொரு சிலையும் சராசரியாக 14-20 டன் எடையுள்ளது. அந்த மக்கள் இச்சிலைகளை "மோய்" என அழைக்கின்றனர். அங்கே இருப்பதிலேயே உயரமான மோய் "பாரோ" என்று அழைக்க படும் மோய் ஆகும். அது 33 அடி உயரமும் 90 டன் எடையும் கொண்டது. இருப்பதிலேயே அதிக எடை கொண்ட மோய் உயரம் குறைந்து அகலம் பெருகி 86 டன் எடையுடன் காண படுகிறது. இன்னோரு பிரமாண்ட மோய் செதுக்கப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ளது அது செதுக்க பட்டு இருந்தால் 69 அடியும் 270 டன் எடையும் கொண்டதாக இருந்திருக்கும், கிபி 1200 இலிருந்து கிபி 1600 ற்கு இடைப்பட்ட காலத்திற்குள் இச்சிலைகள் வடிவமைக்கபட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

 இங்குள்ள பழங்குடியினர் "ராப்பனூய்" என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் கிடையாது. பாலினீஸியன்கள். இவர்களது
மூலக்கூறு DNA ஒப்பீட்டின் படி பாலினீஸியன்களோடு இவர்களது DNA ஒத்துப்போகிறது.
இவர்கள் சுமார் 400 A.D வாக்கில் இங்கு குடியேறி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.வழக்கம்போல இந்த சிலைகளையும் ஏலியன்ஸ்தான் கட்டினார்கள் என கதைகட்டி விட்டிருந்தனர். 1980 களில் ஆராய்ச்சியாளர்கள் இவ்வளவு எடையை நகர்த்திக் கொண்டுவருவது சாத்தியமில்லை என கருத்தினை முதலில் தெரிவித்தனர். இவ்வளவு நவீன உபகரணங்கள் இருக்கும் இக்காலத்திலேயே இது சாத்தியமில்லை அன்று எவ்வாறு நகர்த்தியிருப்பர்?  என்ற கேள்வி அவர்களை குடைந்தது. ஒருவாறு ஒரு விடையை கண்டறிந்தனர். 

பேராசிரியர்கள் சர்ஜிகா ராபு மற்றும் டெரிகண்ட் இந்த தீவையே சுற்றிவந்து சில மர்மங்களுக்கு தீர்வளித்துள்ளனர்.
சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர். இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் சில சிலைகள் உடைந்தும் போனது. 
ஒருவழியாய் 18 ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒரு புதிருக்கு அறிவியல்பூர்மான பதில் 21ம் நூற்றாண்டில் கிடைத்தது.

#அமானுஷ்ய_அனுபவம் 
#மோய்
#ஈஸ்டர் தீவு






பிளாக்வுட்

அமானுஷ்ய அனுபவம்-6

1896 ம் ஆண்டு இங்கிலாந்தின் தூதராய் பாரிஸில் பணியாற்றிய ஆங்கிலேயர் ஹாமில்டன் பிளாக்வுட், மிகஉயர்ந்த பொறுப்பில் பதவியேற்குமுன் ஓய்வுக்காக சில காலம் அயர்லாந்து சென்றார். அங்கு ஆபேலி எனும் நகரில் பெரிய ஆடம்பரமாளிகையில் தங்கியிருந்தார்.ஓய்வுநாட்கள் அங்கு நல்லமுறையில் கழிந்தது. சிலநாட்கள் கழிந்தது. இரவில் அறையின் வெளிப்புறம் சில வினோதங்களை உணர்ந்தார். திடீரென விபரீத சப்தங்கள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்து விழித்துப் பார்க்கையில் அறையின் அருகே அழுகைக் குரல் கேட்டது. பெருங்குரலெழுப்பி விம்மி அழுகும் அந்த குரல் யாருடையது என அறையிலிருந்து வெளியே வந்து காண எண்ணினார். அறையை விட்டு வெளியே வந்ததும், என்னதென அடையாளம் காண இயலா ஒரு மர்மக்குரல் இம்சித்தது. அந்த நள்ளிரவில் மனதில் துணிவை வரவைத்து அந்த குரலின் திசையை நோக்கி நடந்தார். முந்தையநாள் பகலில் அங்கு தான் கண்ட தோட்டமும், சோலைவனமும் மறைந்து ஒருவித கரடுமுரடான புதராய் காட்சியளித்தது. அந்த புதரை விலக்கி பார்த்தால் அங்கு பழங்கால சிலுவைகள் நிறைந்த கல்லறைகள் நிறைய காட்சியளித்தது. துணிச்சலை வரவழைத்து உள்ளே நுழைந்தார் பிளாக்வுட். அங்கே ஒரு கல்லறையின் அருகேயுள்ள மரத்தில் ஓர் நிழலாடியது. யார்நீங்கள் என கத்தியபடி முன்னேறினார். அங்கே "அதை" பார்த்தேவிட்டார். தோளில் கல்லறைப்பெட்டி ஒன்றை சுமந்து குனிந்தவாறு ஓர் உருவம் நடந்து சென்றது. நில்லடா, என குரலை உயர்த்தினார் ப்ளாக்வுட், தன் தோளில் இருந்த சுமையை கீழேவைத்துவிட்டு திரும்பியது அந்த உருவம். மிருகத்தனமான கொடூரமான வெளிறிய முகத்துடன் பளிச்சென்ற கண்களால் பிளாக்வுட்டை பார்த்தது அவ்வுருவம். அதன் கொடூரமுகத்தை கண்ட பிளாக்வுட் பின்வாங்கினார். தன் இடதுகைவிரலை உயர்த்தி பின்தொடராதே! என்பதுபோல் எச்ரித்துவிட்டு மறைந்தது அவ்வுருவம். அலறியபடி அறைக்கு ஓடினார் பிளாக்வுட். மறுநாள் காலை மீண்டும் அங்கே வந்தால் வழக்கம்போல் அங்கு சோலைகளும், தோட்டமும் இருந்தது கல்லறையை காணவில்லை. 

அதன்பின் ஒருவருடம் கழிந்தது. அரசாங்க உயர்பதவியேற்று பிரான்ஸ்நாட்டு தூதுராக பதவியேற்றார். பிரான்ஸ் அரசாங்கம் பிளாக்வுட்டை கவுரவப்படுத்த அங்குள்ள பிரபல கிராண்ட் ஹோட்டலில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மிகவும் மகிழ்வுடன் விருந்து நடந்தது! அதன்பின் தன் உதவியாளர்களுடன் விருந்தினைமுடித்து விட்டுக்கு செல்ல லிப்ட்டை நோக்கி சென்றார். அனைவரும் மரியாதை நிமித்தமாய் வழிவிட்டனர். அப்போதுதான் லிப்டை கவனித்தார். லிப்டிற்குள் ஆப்ரேட்டராய் ஒருவன் அமர்ந்திருந்தான். ஒருகணம் ஆடித்தான் போனார் பிளாக்வுட் அயர்லாந்தில் தான் கண்ட மர்மமனிதன் தன் எதிரே அமர்ந்திருந்தான். அதே கொடூரமுகம், அதே நிலைகுத்திய வாழிகள்! பாளாக்வுட்டை பார்த்து மெல்ல கொடூரசிரிப்பு சிரித்து தலையசைத்தது. பதட்டத்தில் அவர் லிப்டில் ஏறவால்லை. மற்ற உதவியாளர்கள் அனைவரும் ஏறினர். லிப்ட் கதவு தானாக மூடியது. கதவுமூடும் கடைசி இடவெளியில் அந்தகண்கள் பிளாக்வுட்டை பார்த்தது. உடனே லிப்ட் மேலே சென்றது.
ரிஷப்ஷனுக்கு நடந்தே வந்தார் பிளாக்வுட் அவர் வந்துசேரவும் மிகப்பெரும் சப்தத்துடன் லிப்ட் அறுந்து கீழே விழுந்தது. லிப்டில் இருந்த அனைவருக்கும் மாண்டனர். குறிப்பாக அந்த உருவத்தை காண ஓடினார் பிளாக்வுட், ஆனால் அந்த முகம் முற்றிலும் சிதைந்து கிடந்தது.

அன்றைய பிரான்ஸ் மட்டுமல்லாது உலகின் பலநாளிதழ்கள் இச்செய்தியை பிளாக்வுட்டின் பேட்டியுடன் வெளியிட்டன. அன்று பலரை கலங்கச்செய்த அமானுஷ்ய சம்பவம் இது.

#அமானுஷ்யஅனுபவங்கள்
#பிளாக்வுட்



மறலி கை தீண்டா மெய்வழிமதம்

அமானுஷ்ய அனுபவம்-5

மறலி கை தீண்டா மெய்வழிமதம்:

மின்சாரம் கிடையாது, ஆடம்பர பொருட்கள் ஏதும் இல்லை. வீடுகளுக்கு கதவுகள் கூட கிடையாது. விளக்கொளி மட்டுமே அங்கு பிரதானம். இரவு இன்றும் அங்கு இரவாகவே உள்ளது. இப்படியொரு அதிசய கிராமம் நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
கீரனூர்- அன்னவாசல் சாலையில் கிழக்குறிச்சிக்கு அருகேயுள்ளது, மெய்வழிச்சாலை எனும் இவ்வூர். ஊரின் உள்ளே வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. நடந்துதான் போகவேண்டும். இப்படி இந்த ஊரை மாற்றியவரை பற்றி காண்போம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் காதர்பாட்ஷா, தன் சிறுவயதில் மரணம் பற்றி ஓர் பிரசங்கம் கேட்டார். அதில் நரகம் குறித்து விவரிக்கப்பட, நரகம் பற்றிய பயம் அவரை வாட்டியது. மனைவி, மக்களை விட்டு தினமும் ஒரு சாமியாரை தேடி சொர்க்கம் பற்றி வினவுவதையே வழக்கமாய் கொண்டார்.
வள்ளலாரின் குருவான தணிகைமணியாரை சந்தித்து அவரது போதனைகளால் உந்தப்பட்டு 12 ஆண்டுகள் அவருடன் இருந்தார். இல்லறம் மறந்தார். திருப்பரங்குன்றத்தில் 12 ஆண்டுகள் தவம்புரிந்து சொர்க்கத்தின் திசையை அறிந்தார். மதுரையில் புதர்மண்டிய புறம்போக்கு காடினை சீர்செய்து பெரிய குடில் அமைத்தார். பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார், மதுரை பிரிட்டிஷ் கவர்னர் வேவல்துறை அக்குடிலை கண்டு பிரம்மித்து அரசாங்க பணிக்கு இவ்விடத்தை தரும்படி கேட்டார். மறுபேச்சின்றி அவ்விடத்தை வழங்கினார் காதர்பாட்ஷா. அதற்கு ஈடாக ஒருலட்சம் ரூபாய் வெகுமானமாய் தந்தார் கவர்னர். அக்காலத்தில் அந்ததொகை கிட்டத்தட்ட 100 கோடிக்கு சமம். அவ்வளவு பணத்தை கொண்டு செல்வது கடினம் என உணர்ந்து அவற்றை தங்கக்கட்டிகளாய் மாற்றி சுமந்து வந்து புதுக்கோட்டை அடைந்தார். அன்று பாப்பநாச்சிகுளம் என அழைக்கப்பட்ட பகுதியில் 22 ஏக்கர் நிலம் வாங்கினார். கருவேலமரம் நிறைந்த காட்டை திருத்தி குடில்களை அமைத்தார். தங்கக்கட்டிகளை பூமிக்கு அடியில் புதைத்து வைத்தார்.

தான் உணர்ந்த இக்கோட்பாட்டை உலகம் உணர வைக்க "மறலி கைதீண்டா மெய்வழி மதம்" என்ற புதுமதத்தை தோற்றுவித்தார். அதாவது எமனின் கைபடாத மதம் என பொருள்.மரணத்தை வெல்லும் வழியை கூறுகிறேன் என அழைப்புவிடுத்த இவரது சொல்லைக்கேட்டு எண்ணற்ற தொழிலதிபர்கள், வசதிபடைத்தவர்கள் குவிந்தனர். பலர் தாம் பார்த்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கூட வந்தனர்.அவர்கள் காதர்பாட்ஷாவை "ஆண்டவர்" என அழைத்தனர். அவர்களை பாட்ஷா "அனந்தர்கள்" என அழைத்தார். அதன்பின் ஆயிரத்து இருநூறு வீடுகள் பெரும் சுவரெழுப்பி கட்டினார் பாட்ஷா.அதில் நிரந்தரமாய் அவருக்கு சேவைசெய்ய 600பேரும், ஏனையர் வெளியேவும் தங்கி கொள்கையை வளர்க்க வேண்டும் என்றார்.

பூமியில் புதைத்த தங்கம் பற்றிய தகவல் பல வழிகளில் இட்டுகட்டி பரவியது. அன்றைய அரசியல்வாதிகள் கண்ணையும் உறுத்தியது. இந்திராகாந்தி அம்மையார் வரையிலும் இக்கதை பரவி, அங்கு திடீர்சோதனை கூட நடத்தப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட தங்கம் செங்கல் செங்கலாய் உருக்கி வடிக்கப்பட்டிருந்தது. ஒரு கண்காட்சியாக கூட இது சிலகாலம் வைக்கப்பட்டது. இது தொடர்பாய் சட்டப்போராட்டம் கூட நடந்தது. இதனிடையே 1976 ல் காதர்பாட்ஷா இறந்தார். அவரது உடல் வைக்கப்பட்ட இடம் இன்று "பொன்னரங்ங தேவாலயம்" என அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூரில் ஜாதி, மத, இன பேதம் இன்றுவரை கிடையாது.

அனந்தர்கள் பெயருக்குமுன் "மெய்வழி" என்றும், இம்மதத்தை பின்பற்றுவோர் தங்கள் பெயருக்குமுன் "சாலை" எனவும் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இங்கே ஒருவர் இறந்தால் அவர்களது உறவினர் உட்பட எவரும் அவர்களை எண்ணி அழுவதில்லை, மாறாக அடக்கம் செய்யும் வழிவரை சிரித்துக்கொண்டே வருகின்றனர். கணவர் இறந்தபிறகும் பெண்கள் தாலியறுப்பதில்லை, பூ பொட்டுகூட வைக்காமல் இருப்பதில்லை.மாலை ஆறுமணி மேல் வெளியூரார்கள் இங்கே தங்க அனுமதிப்பதில்லை. ராத்திரி முழுவதும் ஒருகுழு பாதுகாப்புக்காக ஊரைச்சுற்றி வலம் வருகின்றனர். மொத்தம் இங்கு 69 ஜாதியினர் அனந்தர்களாக உள்ளனர். கண்டிப்பாக தமிழில்தான் குழந்தைகளுக்கு இங்கே பெயர் வைக்கப்படுகிறது.
பாட்ஷாவின் முதல்மனைவிக்கு பிறந்த ஆயிஷா இன்று 100 வயதை கடந்துவிட்டார்.

அமைதியை நாடிசெல்வோருக்கு சொர்க்கமாகவும், ஆய்வுநோக்கில் செல்வோருக்கு மர்மதேசமாகவும் காட்சியளிக்கிறது "மெய்வழிச்சாலை"


சுடலை மாடன்

அமானுஷ்ய அனுபவம்-4

சுடலை மாடன்:

பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்களை 
1.குடும்ப தெய்வம்
2.குலதெய்வம்
3.ஊர்தெய்வம்
4.பெருந்தெய்வம் என வகைப்படுத்தலாம்.

 குடும்பதெய்வ வழிபாடு பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் வணங்கும் வழக்கம் உள்ளது. வாழ்வாங்கு வாழ்ந்து மடிந்த தம் குடும்பத்தாரை நினைத்து அமாவாசை தோறும் வழிபடுவதை இன்றும் காணலாம். 
 
குலதெய்வம் என்பது ஒரேகுலத்தில் பிறந்த அண்ணன், தம்பியாகிய பங்காளிகள் வணங்குவதே குலதெய்வ முறை. மூத்த சகோதரர்கள் முதல்கொத்தில் அடங்குவர். பங்காளிகளின் எண்ணிக்கை பொறுத்து கொத்துகளின் எண்ணிக்கை கூடும் குறையும். சில கொத்துகளில் ஆண் வாரிசோ, அல்லது குழந்தைப்பேறோ இல்லாவிடில் அக்கொத்து அப்படியே முறிந்துவிடும். நாளாக நாளாக அக்கொத்துகளில் வம்சவிருத்தி இல்லையெனில் அக்குலதெய்வம் தனிமைபடுத்தப்பட்டு சக்தியினை இழக்கும் என்பது ஒரு கருத்து.
 
 ஊர்தெய்வம் என்பது ஐய்யனார், பிடாரி, செல்லாயி போன்ற தெய்வங்களை குறிக்கும் இத்தெய்வங்களை ஊரின் அனைத்து சாதியினரும் வணங்குவர். அனைத்து சாதியினருக்கும் ஒவ்வொருநாள் விதித்து மண்டகப்படி வழங்கப்படும்.

பெருந்தெய்வம் என்பது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்யம்,ஸ்மார்த்தம் போன்ற நெறிகளில் உந்தப்பட்டு நிலையான கோவிலையெழுப்பி வணங்கப்படுதல்.

சுடலைமாடன் தோற்றம்:
சுடலைமாடன் தோற்றத்திற்கு வழங்கப்படும் புராணம் பிற்சேர்க்கைகள் பல நிறைந்தது. சுடலை+மாடன் இரண்டும் ஒன்று என்றும் வேறுவேறு எனவும் இரு கருத்துகள் உண்டு. ஆரம்பகாலத்தில் லிங்கவழிபாடு கற்களாலான லிங்கத்திற்கு முன்பு சுதையினாலும், மரத்தினாலுமே வணங்கினர். இதனை கந்து எனவும் வழங்குவர். கிட்டத்தட்ட சுடலையின் உருவமும் இவ்வாறே இருக்கும். சுடலையின் புராணகதைகூட சிவனைஒட்டியே வருவது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக தமிழ்த்திருமுறையில் 
"காடுடைய சுடலைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்" சுடுகாட்டை காவல் காக்கும் கணங்களின் தலைவனாக, சுடுகாட்டின் காவலனாய் சுடலை கருதப்படுகிறார். ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்கும் பழக்கம் நம் தமிழரிடையே மூவாயிரம் வருடமாய் இருந்துள்ளது. அந்நடுகல் வழிபாட்டின் நீட்சியே மாடன் வழிபாடு என கருதப்படுகிறது! இத்துடன் மயானத்தை காத்துவரும் சுடலையையும் இணைத்து மக்கள் சுடலைமாடனாய் வழிபடுகின்றனர் என்பது இனவரைவியல் ஆய்வாளர்களின் கருத்து.

சுடலை கொடைவிழா: 
பெரும்பாலும் பங்குனி, ஆடி மாதமே கோவில் கொடை நடைபெறும். மக்கள் நோன்பு நோற்று அருகேயுள்ள நீர்நிலைகளில், கரகத்தில் நீர்கொண்டுவந்து சுடலைக்கு திருமுழுக்கு செய்வர். வழிபாட்டுக்கு பிச்சி, மல்லிகை முதலான வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரிப்பர். நேர்ச்சை கொண்ட மக்கள் பாலால் அபிஷேகம் செய்வர். முழுவாழைத்தார், பொரி, வயலில் விளைந்த உணவினை படைப்பர். பீடி, சுருட்டு, சாராயமும் படைக்கப்படும். உயிர்ப்பலியும் உண்டு கோழி, ஆட்டினை படைப்பர். பின்னர் தூபம், தீப வழிபாடு நடைபெறும், மேளதாளம் கொட்ட கொட்ட அருள்வந்து சாமியாடுவர். சங்க இலக்கியம் கூறும் வெறியாட்டு நிகழ்வே இது. அதன்பின் பூசாரியிடம் அருள்கேட்கும் வைபவம் நடைபெறும். இது முடிந்தவுடன் பெண்கள் குழந்தைகளை அப்புறப்படுத்தி 'சாமக்கொடை' நடைபெறும். இவையாவும் அனைத்து சுடலைமாடனுக்கும் நடைபெறும் பொதுவான வைபவங்கள். இப்போது சுடலையை வணங்கும் முறையினை காண்போம்.

சுடலை கோவில் கொடை:

சுடலையை சுற்றி சிறியதாய் ஐந்து கற்களை நட்டுவைத்து அவற்றிற்கும் விளக்கேற்றி வணங்குவர் அந்த தெய்வங்களை 1.பேச்சியம்மன்2.பிரம்மசக்தி3.உச்சிமாகாளி 4.இசக்கியம்மன்5.சப்பாணி என்று அழைத்து வழிபாடு நடக்கும்.
சுடலையின் அலங்காரப்பெட்டி அருகேயுள்ள பூசாரி வீட்டில் இருக்கும். கோவில்கொடை நடக்கும் சமயம், அவர் வீட்டிலிருந்து தலையில் தூக்கிவைத்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வருவர். அப்பெட்டியினுள் சாமியின் உடை, வளரி, மணி, குத்துவாள் போன்றவை இருக்கும். சுடலையை அருகேயுள்ள குளத்திலுள்ள நீரினை கொண்டு நீராட்டி, அலங்காரபெட்டியிலுள்ள பொருட்களை கொண்டு சாமியை அலங்கரித்து வணங்குவர் அதன்பின் பொங்கல் வைத்து படைத்தவுடன் கிடா, கோழியினை பலியிட்டு தலையை சாமிக்கு அருகில் வைப்போம். அதன்பின் சாமியாடிக்கு அருள்வரும். பங்காளிகள் வரிசையாய் நின்று உத்தரவு குறிகேட்கும் வைபவம் நடைபெறும். அதன்பின் வெட்டிய ஆடு, கோழியை சமைத்து, படைத்து அங்கேயே உண்ணுவர். அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பது ஐதீகம்.
பெரும்பாலும் இவ்வைபவம் முடிந்ததும், உறவினர் வீட்டுக்கு சென்று ஒய்வெடுப்பர். அதன்பின் சாமக்கொடை நடைபெறும், பெண்கள் குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட எல்லைவரை வருவர்.அதற்கு மேல் அனுமதி கிடையாது. சுடலைவேடமணிந்து சாமியாடியை அழைத்து வருவர். மேளம், கொட்டு முழங்க அதன்பின் கையில் தீப்பந்தம் ஏந்தி, "பிணந்திண்ணி வேட்டை" நடைபெறும், சுடுகாடுநோக்கி ஒருகையில் வல்லயம், மறுகையில் தீப்பந்தம் ஏந்தி சாமியாடிக்கொண்டே செல்லுவார் சுடலை. அவருடன் சிலர் பந்தம் ஏந்தி உடன் செல்லுவர். உடன் மேளம்கொட்டுவரும் செல்வர். பின்சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்த பிணத்திலிருந்து எழும்பை பிடுங்கி திண்ணுவார்( ஈசனை வணங்கும் முறையான காபாலிக மதத்தின் நீட்சியாய் இது தோன்றுகிறது) உடன்வருவோர் இறந்த பூதவுடல் சாமியாடியை தாக்கும் என கருதி அங்கு ஓர் கோழியை அறுத்து உயிர்ப்பலியிடுவார். அதன்பின் வேட்டை முடிந்ததும் சுடலையின் எல்லைப்பகுதியில் சாமியாடியின் தலையைச்சுற்றி முட்டை வீசப்படும். அதிலிருந்து கோவில்வரை முட்டிகாலிட்டு தலைகுனிந்தே சாமியாடி வருவார். அதன்பின் உடுக்கை மேலும் முழங்க ஒருகனம் பேச்சியம்மன் சாமியாடியின் மேல் வருவார்.இதனை கணியன் உடுக்கை அடிப்பவரிடம் கூறுவார். அப்போது அவர்மேல் புடவை சார்த்தப்படும். இதுமுடிந்ததும் சாமக்கொடைக்கு நேர்ந்தவர்கள் கிடாவை பலியிடுவர் சாமியாடி கிடாவின் ரத்தத்தை குடித்து, ஆட்டினை கீறி ஈரலை உண்ணுவார்.அதன்பின் படையல் உணவு சாப்பிட்டு சாய்ந்ததும். விழா நிறைவு பெறும்.
இந்த குலதெய்வ வழிபாட்டு முறையிலேயே நம் பண்பாடு மறைபொருளாய் ஒழிந்துள்ளது.


ஓய்ஜா போர்டு(Ouija board):

அமானுஷ்ய அனுபவம்-3

ஓய்ஜா போர்டு(Ouija board):

பலகை என்பது ஒரு காகிதம், அட்டை, அல்லது மரம் போன்ற ஏதாவது ஒன்றில் ஓய்ஜா போர்டு அமைக்கப்படுகிறது! அதில், நான்கு புறங்களிலும் சுற்றியோ அல்லது அரைவட்ட வடிவிலோ ஆங்கில எழுத்துக்கள் இருபத்தியாறும், கணித எண்களும் எழுதப்பட்டிருக்கும். இருவர் அப்பலகையின் எதிரெதிரே அமர்ந்திருப்பர். பலகையின் நடுவில் ஒரு வட்டமிடப்பட்டு அதில் ஏதாவது வட்ட நாணயம் ஒன்று வைக்கப்படும். இருவரும் அந்த நாணயத்தைத் தங்கள் சுட்டுவிரலால் ஓரளவு அழுத்தித் (ஆனால் மிகவும் அழுத்தாமல்) தொட்டுக்கொள்வர்.

ஒருவர் தங்கள் மனதிலுள்ள வினாவை எழுப்புவார். பிறகு ஆவியை அழைக்கவென்று சில மந்திரங்கள் போன்று ஏதேதோ சொல்லிவிட்டு, பின்னர் அந்தக் கேள்வியை யாராவது ஒருவர் கேட்பார். அவ்வாறு கேள்வி கேட்கப்பட்ட சில நொடிகளில் அந்த நாணயம் அந்தக் கேள்விக்கான பதிலைக் கொண்ட எழுத்துக்களை நோக்கி நகரும். இதன் பொருள் - நாணயத்தைச் சரியான பதிலுக்கான எழுத்துக்களை நோக்கி நகர்த்துவதன் மூலம் ஆவி தன் பதிலைத் தெரிவிக்கிறது.

இது கி.பி 1100 காலகட்டங்களில் முதன்முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விளையாடும் விதிமுறைள்:

1.வெறும் விளையாட்டாக எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் முயற்சித்தால் மட்டுமே உங்களால் ஆத்மாக்களுடன் தொடர்புகொள்ள முடியும். 

2.மொட்டை மாடியிலோ அல்லது திறந்த நிலப்பரப்பு உள்ள இடங்களிலோ கண்டிப்பாக இதை பயன்படுத்தகூடாது.

3.முதலில் நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த போகிறீர்களோ அந்த அறையை சுத்தமாக வைக்கவும். துடைப்பம் , செருப்பு ஆகியவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி சிலைகளோ, படங்களோ இறைதொடர்பானவை இருந்தால் அவற்றையும் நீக்கவும். 
அதேபோல் கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை துணியால் மூடிவிடவும்.. கண்ணாடிகள் ஆவி உலகிற்கும் நம் உலகிற்கும் பாலமாக நம்பப்படுகிறது எனவே கண்ணாடிகளை கண்டிப்பாக மூடி வைக்கவும்.

3.நீங்கள் தனியாகவே இதை பயன்படுத்தலாம்.. இருந்தாலும் ஒரு நண்பருடன் நீங்கள் இதை பயன்படுத்துவது நல்லது .

4.இரவு நேரமே இதை பயன்படுத்த உகந்த நேரம். உங்கள் அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவா்த்தி வெளிச்சதை மட்டும் பயன்படுத்தவும் , அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துகொள்வது மிக முக்கியம்.

5.தரையில் அமர்ந்து உபயோகிப்பதே சிறந்தது. முதலில் ஒரு நாணயத்தை போர்டின் மீது வைத்து அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும் . இதை உபயோகிக்கும் பொழுது அருகில் உங்கள் நண்பா்கள் இருந்தால் அவர்களும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை நாணயத்தை சுற்றவும். சுற்றியபின் " இங்கே யாரவது இருகிறீர்களா? " என்று கேட்கவும் . 
இதுதான் முதல் அடி நீங்கள் அவற்றுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் .

4.சில நேரம் நாணயம் நகராது. ஒரு வேலை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல் இருக்கலாம், இல்லையென்றால் இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . "Yes ", "S" என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால் ஆத்மா அந்த அறையில் இருக்கிறது என்றும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள தயார் என்றும் அர்த்தம் ..

5.உங்கள் முதல் கேள்வி "நீங்க MOONல் இருந்து வரீங்களா? இல்லை SUNல் இருந்து வரீங்களா? ", என்று கேட்கவும். நாணயமானது மூன் படம் பக்கமோ அல்லது மூன் என்ற எழுத்துக்களையோ நெருங்கினால் அந்த ஆத்மா பொய்களை அதிகமாக கூறக்கூடியது, தீய ஆத்மா என்று அர்த்தம், Sunஎன்றால் அது உண்மையை பேசும் நல்ல ஆத்மாவாகும்.

6.அவற்றிடம் வழக்கமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் . முக்கியமாக அவற்றிடம் பேசும் பொழுது சிரிக்கவோ, இல்லை பயமோ கூடாது. உங்களது சில்லறை தனமான கேள்விகள் அவற்றை எரிச்சல் அடைய செய்யலாம்.

7.பெயர், எப்போது இறந்தீர்கள்? உங்களுடன் வேறு ஆன்மா உள்ளதா? என Formality questions கேட்கலாம்! 

8.உங்கள் கேள்விகளுக்கு நாணயம் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து பதில் சொல்லும் . அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்துகொள்ளலாம் .

9.நாணயம் Z-A அல்லது 9-0 என்று வரிசையாக நகர்ந்தால் அவை தொடர்பை முடித்துக்கொள்ள முயல்கிறது என்று அர்த்தம், அந்த நிலையில் நீங்கள் "Goodbye" என்று சொல்லி முடித்துக்கொள்ளவும். 

நாணயம் Goodbye ல் நகர்ந்தபிறகே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்கள் விரலை நாணயத்தில் இருந்து எடுக்க கூடாது. 

மேலும் கேட்கும் கேள்விகளுக்கு "Z" அல்லது "O" வில் மாறி மாறி குதித்தால் அது Zozo எனும் துர்ஆத்மா ஆகும். இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.

இந்த போர்டு Online ல் கிடைக்கிறது! 😱😱😱 விளையாடுவோமா! ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று புதுமைப்பித்தன் கூறுவார். நம்பிக்கை வேறு பயம் வேறு.
நமக்கு இது இரண்டுமே உண்டு😱😱😱




Friday, 26 June 2020

The Brown lady

அமானுஷ்ய அனுபவங்கள்-2

The Brown lady :

1686 ல் September 18 ல் ஹாக்டன் அறையில்Dorothy  walpole எனும் பெண்குழந்தை பிறந்தது, இவர் இங்கிலாந்தின் முதல் பிரதமரான Robert walpole வின் மகளாவார். செல்வச்செழிப்பான உயர்வகுப்பு குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் இளம்பருவத்தில் வாழ்க்கை இனிமையாகவே கழிந்தது Dorothy walpoleக்கு. 25 ஜீலை 1713 ல் Charles townshend எனும் பிரபல வேளாண்மை கருவிகள் கண்டுபிடிக்கும் அறிவியலாருக்கு இரண்டாவது மனைவியாய் Dorothyன் பெற்றோர் மணமுடித்து வைத்தனர், Dorothy க்கு Lord wharton என்பவருடன் திருமணத்திற்கு முன்பே ஓர் ஈர்ப்பு இருந்தது,திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்தது, Torothy க்கு தன் கணவரின் முதல்மனைவியின் ஐந்து குழந்தைகள் மேல் பாசம் அதிகம் இருந்தது. ஒருகட்டத்தில் Dorothyன் மற்றொரு காதல் Charlesற்கு தெரியவர அவளை Raynham hallல் உள்ள படுக்கையிலேயே கட்டி வைத்து பூட்டிவிட்டார், மேலும் தனது குழந்தைகளையும் காண்பதற்கு அனுமதிக்கவில்லை. தனிமையின் காரணமாய் மனஅழுத்தம் ஏற்ப்பட்டு, பைத்தியமாய் பிதற்றி, ஒருகட்டத்தில் பெரியம்மை வந்து பின் அங்கேயே 1726ல்  இறக்கிறார். தனது குழந்தைகளை இறக்கும்வரை பார்க்க அனுமதிக்காது பிரித்துவைத்ததால் ,அவளது ஆவி  அங்கேயே உலாவுவதாக இருநூற்றாண்டுகள் இங்கிலாந்தில் இக்கதை வேகமாய் பரவியது. அந்த அறைக்கு செல்வே அனைவரும் பயந்தனர். ஆனால் அதன்பிறகு Dorothy யை சுற்றி நிறைய கட்டுகதைகள் உருவாகின. அதன்பின் அவள் "The brown lady ghost" என அழைக்கப்பட்டாள்.

Dorothy இறந்து நூறு வருடம் கழித்து
1836 ஆம் ஆண்டில், பிரபல எழுத்தாளர் கேப்டன் மரியாட்  வேட்டைக்காரர்களுடன் ரெய்ன்ஹாம் ஹாலில் தங்கியிருந்தார், மறுநாள் காலையில் தொடங்கவிருந்த வேட்டை பயணத்திற்காக காத்திருந்தார்.   பிரவுன் லேடியின் புராணக்கதை அப்போது இங்கிலாந்து முழுக்க பிரசித்தம், வேட்டையாட ஆயுதங்களை தயார் செய்ய தன் குழுவுடன் ஒருவித அசட்டு தைரியத்தில் Dorothy ன் அறையில் நுழைந்தபோது, ​​ஒரு சோகமான பெண்ணைக் கவனித்தார்கள், அதுவும் பழுப்பு நிற சில்க் உடையில். கேப்டன் மரியாட் உடனடியாக அந்தப் பெண்ணை டோரதி என்று அடையாளம் கண்டுகொண்டார், ஏனெனில் அவர் உருவப்படம் அவர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அருகில் ஒரு ஹால்வே சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த பெண் அங்கிருந்த ஆண்களையும் இடைநிறுத்தி மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் முறைத்துப் பார்த்ததாள். அலறியடித்து அனைவரும் ஓடினர்.ஒரு துப்பாக்கியை ஏந்தியிருந்த கேப்டன் மரியாட், தனது ஆயுதத்தை இழுத்து, உடனடியாக துப்பாக்கியால்  அந்த பெண்ணை சுட்டார்.  அந்த பெண் உடனே மறைந்துவிட்டாள். அவள் நின்று கொண்டிருந்த பின்னால் ஒரு கதவில் புல்லட் பதிக்கப்பட்டிருந்ததை பார்த்தார் கேப்டன். இச்ம்பவம் இலண்டன் முழுக்க பரவியது.

 அதன்பின் 1849 ஆம் ஆண்டில், மேஜர் லோப்தஸ் ஒரு நண்பருடன் ரெய்ன்ஹாம் ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்.  போட்டி முடிந்ததும் அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல நடந்தனர். அப்போது லோப்துவின் நண்பர் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு பெண்ணை சுட்டிக்காட்ட இருவரும் திகைத்து நின்றனர், காரணம் அந்தப் பெண் பழைய பாணியிலான ஆடைகளை அணிந்திருந்தார்.  அவர்கள் முறைத்துப் பார்த்தபோது, ​​அந்தப் பெண் மெதுவாக மெல்லிய காற்றில் மறைந்தாள்.

 அடுத்த வாரம் கர்னல் லோஃப்டஸ் மீண்டும் அந்த உருவத்தைக் கண்டார்.  இருப்பினும், இந்த நேரத்தில், அவர் அவளைப்  நன்றாகப் பார்த்தார்.  அவள் ஒரு உயர்வகுப்பு தோற்றமுடைய பெண் என்று அவர் கூறினார்.  அவள் அதே பழுப்பு நிற சாடின் உடையை அணிந்திருந்தாள், அவளுடைய தோல் வெளிறிய நிறத்தில் இருந்தது, 

 கர்னல் லோஃப்டஸ் தனது அனுபவத்தை மற்றவர்களிடம் சொன்னார், அதன்பின் நிறைய நபர்கள் அவளை பார்த்ததாய் கூற, ஒரு ஓவியர் ‘பழுப்பு நிற பெண்ணின்’ ஓவியத்தை வரைந்தார், பின்னர் இந்த படம் அவள் அடிக்கடி பார்க்கப்பட்ட அறையில் தொங்கவிடப்பட்டது.

 ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு டவுன்ஷெண்ட் வாரிசு தனது மகன் மற்றும் ஒரு நண்பருடன் ரெய்ன்ஹாம் ஹாலில் வார இறுதியில் தங்கியிருந்தார்.  புராணக்கதை தெரியாமல், பழுப்பு நிற உடையணிந்த ஒரு பெண்மணி அங்கு நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.  டோரதி வால்போலின் உருவப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பெண்ணைப் போலவே அவள் தோற்றமளித்தாள் என்பது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
 
அதன்பின் Raynham hall ல் 1936ம் ஆண்டு இலண்டன் மேகஸின் பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்டது. இந்தப்புகைப்படத்தின் மற்றுமொரு சுவாராஸ்யம்… இதுவரை எடுக்கப்பட்ட பல பேய் புகைப்படங்களில் ஆவிகளின் உருவம் பிரிண்ட் போட்ட பிறகுதான் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்படத்திலிருக்கும் உருவம் கேமரா ஷட்டரை க்ளிக் செய்யும் சில நொடிகளுக்கு முன்னர் நேரிலும் தெரிந்திருக்கிறது. இந்தப்படமும், நெகட்டிவ்வும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு இதில் எந்தவித போலித்தனமும் இன்றளவும் கண்டறியப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

 புகைப்படம் படிக்கட்டுகளில் பேய் போன்ற உருவத்தை தெளிவாகக் காட்டுகிறது.  இன்றுவரை இது ஒரு பேய் எவ்வாறு இருக்கும் என அறிந்துகொள்ள உதவும்  புகைப்படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

#day2
#ghoststorieshe Brown lady :

1686 ல் September 18 ல் ஹாக்டன் அறையில்Dorothy  walpole எனும் பெண்குழந்தை பிறந்தது, இவர் இங்கிலாந்தின் முதல் பிரதமரான Robert walpole வின் மகளாவார். செல்வச்செழிப்பான உயர்வகுப்பு குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் இளம்பருவத்தில் வாழ்க்கை இனிமையாகவே கழிந்தது Dorothy walpoleக்கு. 25 ஜீலை 1713 ல் Charles townshend எனும் பிரபல வேளாண்மை கருவிகள் கண்டுபிடிக்கும் அறிவியலாருக்கு இரண்டாவது மனைவியாய் Dorothyன் பெற்றோர் மணமுடித்து வைத்தனர், Dorothy க்கு Lord wharton என்பவருடன் திருமணத்திற்கு முன்பே ஓர் ஈர்ப்பு இருந்தது,திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்தது, Torothy க்கு தன் கணவரின் முதல்மனைவியின் ஐந்து குழந்தைகள் மேல் பாசம் அதிகம் இருந்தது. ஒருகட்டத்தில் Dorothyன் மற்றொரு காதல் Charlesற்கு தெரியவர அவளை Raynham hallல் உள்ள படுக்கையிலேயே கட்டி வைத்து பூட்டிவிட்டார், மேலும் தனது குழந்தைகளையும் காண்பதற்கு அனுமதிக்கவில்லை. தனிமையின் காரணமாய் மனஅழுத்தம் ஏற்ப்பட்டு, பைத்தியமாய் பிதற்றி, ஒருகட்டத்தில் பெரியம்மை வந்து பின் அங்கேயே 1726ல்  இறக்கிறார். தனது குழந்தைகளை இறக்கும்வரை பார்க்க அனுமதிக்காது பிரித்துவைத்ததால் ,அவளது ஆவி  அங்கேயே உலாவுவதாக இருநூற்றாண்டுகள் இங்கிலாந்தில் இக்கதை வேகமாய் பரவியது. அந்த அறைக்கு செல்வே அனைவரும் பயந்தனர். ஆனால் அதன்பிறகு Dorothy யை சுற்றி நிறைய கட்டுகதைகள் உருவாகின. அதன்பின் அவள் "The brown lady ghost" என அழைக்கப்பட்டாள்.

Dorothy இறந்து நூறு வருடம் கழித்து
1836 ஆம் ஆண்டில், பிரபல எழுத்தாளர் கேப்டன் மரியாட்  வேட்டைக்காரர்களுடன் ரெய்ன்ஹாம் ஹாலில் தங்கியிருந்தார், மறுநாள் காலையில் தொடங்கவிருந்த வேட்டை பயணத்திற்காக காத்திருந்தார்.   பிரவுன் லேடியின் புராணக்கதை அப்போது இங்கிலாந்து முழுக்க பிரசித்தம், வேட்டையாட ஆயுதங்களை தயார் செய்ய தன் குழுவுடன் ஒருவித அசட்டு தைரியத்தில் Dorothy ன் அறையில் நுழைந்தபோது, ​​ஒரு சோகமான பெண்ணைக் கவனித்தார்கள், அதுவும் பழுப்பு நிற சில்க் உடையில். கேப்டன் மரியாட் உடனடியாக அந்தப் பெண்ணை டோரதி என்று அடையாளம் கண்டுகொண்டார், ஏனெனில் அவர் உருவப்படம் அவர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அருகில் ஒரு ஹால்வே சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த பெண் அங்கிருந்த ஆண்களையும் இடைநிறுத்தி மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் முறைத்துப் பார்த்ததாள். அலறியடித்து அனைவரும் ஓடினர்.ஒரு துப்பாக்கியை ஏந்தியிருந்த கேப்டன் மரியாட், தனது ஆயுதத்தை இழுத்து, உடனடியாக துப்பாக்கியால்  அந்த பெண்ணை சுட்டார்.  அந்த பெண் உடனே மறைந்துவிட்டாள். அவள் நின்று கொண்டிருந்த பின்னால் ஒரு கதவில் புல்லட் பதிக்கப்பட்டிருந்ததை பார்த்தார் கேப்டன். இச்ம்பவம் இலண்டன் முழுக்க பரவியது.

 அதன்பின் 1849 ஆம் ஆண்டில், மேஜர் லோப்தஸ் ஒரு நண்பருடன் ரெய்ன்ஹாம் ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்.  போட்டி முடிந்ததும் அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல நடந்தனர். அப்போது லோப்துவின் நண்பர் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு பெண்ணை சுட்டிக்காட்ட இருவரும் திகைத்து நின்றனர், காரணம் அந்தப் பெண் பழைய பாணியிலான ஆடைகளை அணிந்திருந்தார்.  அவர்கள் முறைத்துப் பார்த்தபோது, ​​அந்தப் பெண் மெதுவாக மெல்லிய காற்றில் மறைந்தாள்.

 அடுத்த வாரம் கர்னல் லோஃப்டஸ் மீண்டும் அந்த உருவத்தைக் கண்டார்.  இருப்பினும், இந்த நேரத்தில், அவர் அவளைப்  நன்றாகப் பார்த்தார்.  அவள் ஒரு உயர்வகுப்பு தோற்றமுடைய பெண் என்று அவர் கூறினார்.  அவள் அதே பழுப்பு நிற சாடின் உடையை அணிந்திருந்தாள், அவளுடைய தோல் வெளிறிய நிறத்தில் இருந்தது, 

 கர்னல் லோஃப்டஸ் தனது அனுபவத்தை மற்றவர்களிடம் சொன்னார், அதன்பின் நிறைய நபர்கள் அவளை பார்த்ததாய் கூற, ஒரு ஓவியர் ‘பழுப்பு நிற பெண்ணின்’ ஓவியத்தை வரைந்தார், பின்னர் இந்த படம் அவள் அடிக்கடி பார்க்கப்பட்ட அறையில் தொங்கவிடப்பட்டது.

 ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு டவுன்ஷெண்ட் வாரிசு தனது மகன் மற்றும் ஒரு நண்பருடன் ரெய்ன்ஹாம் ஹாலில் வார இறுதியில் தங்கியிருந்தார்.  புராணக்கதை தெரியாமல், பழுப்பு நிற உடையணிந்த ஒரு பெண்மணி அங்கு நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.  டோரதி வால்போலின் உருவப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பெண்ணைப் போலவே அவள் தோற்றமளித்தாள் என்பது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
 
அதன்பின் Raynham hall ல் 1936ம் ஆண்டு இலண்டன் மேகஸின் பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்டது. இந்தப்புகைப்படத்தின் மற்றுமொரு சுவாராஸ்யம்… இதுவரை எடுக்கப்பட்ட பல பேய் புகைப்படங்களில் ஆவிகளின் உருவம் பிரிண்ட் போட்ட பிறகுதான் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்படத்திலிருக்கும் உருவம் கேமரா ஷட்டரை க்ளிக் செய்யும் சில நொடிகளுக்கு முன்னர் நேரிலும் தெரிந்திருக்கிறது. இந்தப்படமும், நெகட்டிவ்வும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு இதில் எந்தவித போலித்தனமும் இன்றளவும் கண்டறியப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

 புகைப்படம் படிக்கட்டுகளில் பேய் போன்ற உருவத்தை தெளிவாகக் காட்டுகிறது.  இன்றுவரை இது ஒரு பேய் எவ்வாறு இருக்கும் என அறிந்துகொள்ள உதவும்  புகைப்படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

#day2
#ghoststories





Saturday, 20 June 2020

டாக்டர் ரோவல்

அமானுஷ்ய அனுபவம்-01

ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு

அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு''

(புறநா. 356)

 (பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள்.)

 
பேய்கள் குறித்து சங்கஇலக்கியம் முதல் காஞ்சனா 3 வரை நிறைய குறிப்புகள் உண்டு. நேரடியாக சான்றுகள் இல்லாவிடினும், அனைவரும் பயப்படும் ஒரு விஷயம் பேய். இலக்கியம் தவிர்த்து கல்வெட்டிலும் கூட பேய்குறித்த குறிப்பு உண்டு. திருக்கோளக்குடி கருவறை நிலவறையில் ஒரு கல்வெட்டு 'மூவேந்தன்' எனும் பைசாசம் பற்றி கூறுகிறது. பேயை அனுபவப்பூர்வமாய் உணர்ந்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் அனுபவங்களை 
கொஞ்சம் பார்ப்போம்:

ஜீலியஸ் சீசரை கொன்ற புருட்டோஸ், மார்க் ஆன்டனியின் படையோடு மோத ஓரிடத்தில் தங்கியிருந்தார் அப்போது சீசரின் ஆவி, புருட்டஸின் கட்டிலின் அருகே நின்று மிரட்டியதாய் வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் கூறுகிறார். 

இனி அமானுஷ்யத்தை அனுபவித்த மனிதர்கள் மற்றும் பேய், ஆவியை உணர்ந்த மனிதர்களின் அனுபவங்களை தினமும் காண்போம்.

லண்டனில் 1882 ல் பிறந்தவர் கென்னத் வாக்கர் பிரபல மருத்துவமேதை, இன்றைய அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு முன்னோடியாய் திகழ்பவர். பல புத்தகங்களை எழுதினாலும் தனது அனுபவத்தை The unconscious mind எனும் நூலில் எழுதியுள்ளார்.
கென்னத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல் பொறுப்பான மனிதர் பொய்பேசும் வழக்கம் இல்லாதவர், அவர் விவரித்த சம்பவம் இது:

மதியம் 12 மணி
ஆஸ்பத்திரியில்(செயின்ட் ஃபிரையாஸ்)ரவுண்ட்ஸ் முடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். ஆஸ்பத்திரிக்கும் மெடிக்கல் காலேஜிற்கும் இடையே ஒருபாலம் உண்டு, அதில் நடந்து வந்தேன் எனதெதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆஸ்பத்திரி யூனிபாஃர்ம் அணிந்த நர்ஸ் வந்தார். அவரை இதற்குமுன் பார்த்ததில்லை. அந்த யூனிபாஃர்ம் கொஞ்சம் கண்ணை உறுத்தியது, காரணம் அது ஆஸ்பத்திரியின் பழைய மாடல் துணி. அதனை யாரும் தற்போது அணிவதில்லை, நான் அருகில் செல்ல சற்று விலகினார், மரியாதை நிமித்தமாய் என் தொப்பியை விலக்கி காட்டினேன். அவரும் மெல்ல தலையசைத்து என்னை தாண்டி சென்றார். சரேலென திரும்பி பார்க்கையில் அவர் அங்கு இல்லை. இருபுறமும் தோட்டம் எனவே அவர் அங்கே செல்லவும் வாய்ப்பு இல்லை. அவர் மறைந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். எனக்கு பயமில்லை ஆச்சர்யமே மேலோங்கியது. உடனே ஆஸ்பத்திரி முழுக்க அலைந்தேன் தென்படவில்லை அவர். சீனியர் நர்ஸ் அறைக்கு சென்று நீளமான மூக்கோடு 50 வயது செவிலியரை பார்த்தீர்களா? என கூறியதும் அங்கு இறுக்கமான சூழல் நிகழ்ந்தது. தலைமை டாக்டர் மேர்ட்டன் 8ம் வார்டு நர்ஸை பார்த்தீர்களா? என வினவினார். 

மேலும் ஐந்தாறு நர்ஸ்கள் "அதை" பார்த்தது தெரிந்தது. அனைவரும் நான் கண்ட உருவத்தை அப்படியே கூறினார்கள்.
8 ம் நம்பர் வார்டுக்கு பணிசெல்ல அனைவரும் பயப்படுகின்றனர். பகலிரவு என்றில்லை, கூட்டமில்லா நேரத்திலும் திடீரென எதிரே அது தென்படுகிறது! ஆகவே அந்த வார்டுக்கு யாருமே போவதில்லை என்றனர். நிறைய சீனியர் மருத்துவர்களும் பார்த்துள்ளனர்.அவர்களுள் ரிட்டயர்ட் மருத்துவர் டாக்டர் ஃபிராங்கை நான் காண சென்றேன். ஏனெனில் அவரும் பார்த்துள்ளாராம். இந்த நர்சுகள் பொய் சொல்ல வாய்ப்புள்ளது! எனவே அவரைத் தேடி சென்றேன். அந்த நர்சின் கண்ணில் கலவரம் இருந்ததாகவும் தன்னைத் தாண்டிச் செல்கையில் பளிச் என மறைந்ததாகவும் கூறினார். மேலும் விசாரித்ததில் அந்த நர்சிற்கும் மேலதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட, சென்சிட்டிவான அந்த நர்ஸ் ஆஸ்பத்திரியின் நான்காவது மாடியிலிருந்து குதித்து இறந்ததாக ப்ராங்க் கூறியுள்ளதை குறிப்பிடுகிறார்.

(இக்கதை படித்துக்கொண்டிருக்கும்போது கரண்ட் கட் ஆகி நர்சு பின்னாடி நிக்கிறது மாதிரி Feel ஆகி ஒரே அசிங்கமாயிருச்சி குமாரு!)

அடுத்த கதை அடுத்த பதிவில் பார்ப்போம்.



காளிதேவி தரிசனம்

அமானுஷ்ய அனுபவம்-16 காளிதேவி தரிசனம் : Disclaimer : இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங...