அமானுஷ்ய அனுபவம்-16
காளிதேவி தரிசனம்:
Disclaimer :
இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங்கிமுனி மாந்திரீகம், அகத்தியர் மாந்திரீகம், மாந்திரீகபோதினி எனும் நூலில் கொஞ்சம் Reference எடுத்து எழுதிருக்கேன், கொஞ்சம் சுவாரஸ்யமா இருந்ததால Share பன்றேன்.
சூரியதாரணை அப்பியாசம்:
அதிகாலை எழுந்து, மல,ஜலம் கழித்துவிட்டு நீர்நிலையில் முக்கியமாய் கடலாய் இருந்தால் உத்தமம், சூரியனின் உதயத்தை ஆரம்பத்திலிருந்து காணவேண்டும். கண்களை நன்றாய் சூரியனின் மையத்தை நோக்கி காணவேண்டும். அவ்வாறு காணுகையில் கண்களில் கிரணம் ஏற்படும்! அவ்வாறு கிரணம் ஏற்ப்பட்டவுடன் பார்க்கக்கூடாது. இவ்வாறு தினமும் பார்த்து கண்களை பழக்கியதும் ஒளியின் பிரகாசத்தை நேராய் காணும் பலத்தினை கண்கள் பெற்றுவிடும். இந்த பயிற்சி அப்பியாசம் எனப்படும். இதற்கு நாள் கணக்கு கிடையாது. நமக்கே என்று பயிற்சிபூரணமடைந்து என தோன்றியதோ அப்போது நிறுத்தி விடனும்.
தீபஒளி அப்பியாசம்:
தனித்த ஒரு அறையில் ஆமணக்கு எண்ணையால் விளக்கு ஏற்றி, காற்று உட்புகாத அறையால், ஒரு கட்டைவிரல் அளவு தீபம் எரியுமாறு தூண்டிவிட்டு சுத்தாசணம் போட்டு அமர வேண்டும். மனதை ஒருநிலைபடுத்தி கண்களின் ரப்பை அசையாமல் தீபத்தை உற்றுநோக்க வேண்டும்,ஒருமணிநேரம் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.குறைந்தது ஒருமாதகாலம் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.
இருட்டறை அப்பியாசம்:
மேற்கண்ட பயிற்சியினில் தேறியபின் மையிருட்டு என கூறும்வண்ணம் ஒலி, ஒளி மாசில்லாத சூழலை உருவாக்கி, தான்வாடும் மூச்சுசப்தம் மட்டும் பேரிரைச்லாய் கேட்கும் வரை, மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனையை நெற்றியின் நடுவே நிறுத்த வேண்டும். சில மந்திரங்கள் உண்டு அதனைக்கூறி வர அதிகபட்சம் ஒரு மண்டலத்தில் கண்முன்னே ஒளி தோன்றும்.நாளாக நாளாக அந்த ஒளியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வரும். இதில் மிகச்சிரத்தையாய் செய்பவர் பதினைந்தடிதூரம் வரை அந்த ஒளியை ஏவ முடியும். இவ்வொளியை மிருகங்களிடம் பிரயோகித்து பரிசோதனை செய்து, நெருக்கமானவர்களிடம் ஏவி சோதித்து, பயிற்சி கூட கூட எவர்மேலும் பிரயோகம் செய்யும் ஆற்றல் கூடி வரும்.
காளி வசிய மந்திரம்:
காளியென்றால் உலகமெல்லாம் கதறிநிற்கும்
காலமறிந்த அருமைத்தாய் வசியஞ்செய்வேன்
வாளிதொடு ஓம் சிவசிவா வென்ற சக்தி
வரணிக்க தேவியே காளிசத்தி
நாளறிந்து நலமறிந்து என் முன்னின்று
நானவில்லும் பகைவரெல்லாம் நசித்துபோக
கோளரியே நீ செய்வாய் தள்ளி தள்ளி
குணந்தந்து குறைமொழியாய் கும்பிட்டேனே
என்ற மந்திரத்தை குளித்து வெண்பட்டாடை அணிந்து தலையில் நீறுதரித்து, அதன்மேல் குங்குமமிட்டு, புழுங்கலரிசி சோறிட்டு கோழியும், அதில் முட்டையும் பாலும் சமைத்து, பால் பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து, சூடம், புஷ்பம் இளநீர் இவற்றை வாழையிலையில் பரப்பிவைத்து 1008 தரம் மேல்கண்ட மந்திரத்தை கூறினால் காளிதேவி பிரசன்னமாவாள், அப்போது பிரகாசமான ஒளிதோன்றும் கொஞ்சமும் பயப்படாமல், இன்றுமுதல் என்னுடன் வருவாய் அகிலமாதா என திருவடியை பணிவாய் சரணடைய வேண்டும்.
இது பழைய ஓலைச்சுவடி படியெடுத்து, கொரக்கோட்டை வடிவேலு செட்டியார் என்பவரால் பதிக்கப்பட்டது. சரி முயற்சி பண்ணி பாப்போம். காளியை பாத்திர வேண்டிதான்.

No comments:
Post a Comment